• Latest News

    December 05, 2017

    காரைதீவு பிரதேசபைக்கான சுயேச்சைக்குழு வேட்பாளர்கள் ஏகமனதாக தெரிவு

    யூ.கே. காலித்தீன் -
    எதிர்வரும் காரைதீவுப் பிரதேச சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேச்சைக் குழு ஏகமனதாக ஊர்மக்கள் பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

    இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேசபைக்கு சுயேச்சையாக போட்டியிடுவதென காரைதீவு ஊர்பொதுக்கூட்டத்தில் தீர்மானம் ஏலவே எட்டப்பட்டிருந்தமை தெரிந்ததே.
    அந்நிலையில் அங்கு காரைதீவின் மகாசபை அமைப்பின் பிரதிநிதிகளால் இத்தெரிவு அமைதியான முறையில் புதிய பொறிமுறையொன்றினுடாக  இடம்பெற்றது.

    வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தெரிவு நிகழ்வு விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் சம்மாந்துறைப் பிராந்திய நிலஅளவைத்திணைக்கள அத்தியட்சகரும் மகாசபை தலைவருமான  கே.தட்சணாமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

    இந் நிகழ்வில் வட்டாரமுறையாக வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இதில் மகாசபை உறுப்பினர்களால் வாக்கு பதிவுசெய்யப்பட்டு பெறப்பட்ட வாக்குகளில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற நால்வர் முதல் பட்டியலில் அதாவது வட்டாரமுறைப்பட்டியலில் இடம்பெறுவதற்கு ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

    காரைதீவில் 7வட்டாரங்கள் உள்ளன. அவற்றில் 4 வட்டாரங்கள் காரைதீவு தமிழ்மக்களுக்கும் மீதி 3 வட்டாரங்கள் காரைதீவிலுள்ள மாளிகைக்காடு மாவடிப்பள்ளி முஸ்லிம் மக்களுக்குமுரியதாகும்.

    காரைதீவு பிரதேசசபைக்கான உறுப்பினர்கள் 11 ஆகும். எனவே வேட்பாளர்கள் 14பேராகும். காரைதீவுக்குரிய 4 வட்டாரங்களுக்குமான வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது. 

    அதில் ஏலவே மகாசபைக்கு வேட்பாளர் விருப்பக்கடிதம் சமர்ப்பித்து சமுகமளித்தவர்கள் மத்தியிலே வாக்களிப்பு பொறிமுறை மூலம் தெரிவுகள் பகிரங்கமாக ஜனநாயகமுறைப்படி  இடம்பெற்றன. இவர்களில் அதிகூடிய வாக்குகளைப்பெற்ற நால்வர் பிரதான வட்டாரமுறைவேட்பாளர்களாகத் தெரிவானார்கள்.
     
    முதல் முக்கிய 4 பிரதான  வேட்பாளர்கள் விபரம் வருமாறு.
    காரைதீவு  வடக்கு வட்டாரம் (1,2,5ம்பிரிவுகள்) சி.நந்தேஸ்வரன்.
    காரைதீவு  கிழக்கு வட்டாரம் (3,4,8,9ம்பிரிவுகள்)ந.ஜெயகாந்தன்.
    காரைதீவு தெற்கு வட்டாரம்(11,12பிரிவுகள்)-மா.புஸ்பநாதன்.
    காரைதீவு வடக்கு வட்டாரம்(6,7,10 பிரிவுகள்)-ச.நந்தகுமார்
    ஏனைய மீதி வேட்பாளர்களின் பெயர் விபரம் சிலநாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்று மகாசபையினால் அங்கு தெரிவிக்கப்பட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காரைதீவு பிரதேசபைக்கான சுயேச்சைக்குழு வேட்பாளர்கள் ஏகமனதாக தெரிவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top