• Latest News

    December 02, 2017

    சமகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

    தலைமை பதவியென்பது சுகபோகங்களை அனுபவிப்பதற்கு அல்ல மாறாக நம் சமூக முன்னேற்றத்தையும் தலைவிதியையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறவேண்டும். தலைவர் என்பவர் ஆளுமை மிக்கவராகவும் தைாியமாக எழக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.
     -------------------------------------------------------------------------------------------------------------------------
    (கல்முனையூர் அப்ராஸ்)
    இன்றைய காலகட்டத்தில் நம் சமூகம் பல்வேறு பிடிக்குள் சிக்கித் தவிர்ப்பதையும் அதன் தார்ப்பரிய யதார்த்தங்களையும் தேடி நிற்கின்றது என்றால் மிகையாகாது. தனது சொந்த விடயத்திலும் சரி அரசியல் விடயத்திலும் நாம் வாழும் இப்பல்லின நாட்டில் நாம் பெற்றுக்கொள்ளும் உரிமைகள் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகின்றது என்றால் அது கேள்விக்குறியாகவுள்ள நிலையிலேயே இன்று நாம் பயணத்தை மேற்கொள்கிறோம். இதுதான் இன்றைய யதார்த்தமாகும். அன்று விடுதலைப்புலிகளின் பிடிக்குள் அகப்பட்டு உடுத்த உடையோடு வெளியேறிய நினைவுகளும் அதன் வெளியரங்க செயற்பாடுகளும் அது உணர்த்திய பாடங்களும் அதன் பின்னரான வாழ்வின் அவலங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றது. தற்கால நம் அரசியல் செயற்பாடுகள் நமது சமூக இருப்பிடத்தை கேள்விக்குறியாக்கின்றதாகவே உணரப்படுகின்றது. பட்டமும் பதவியும் தனக்கே என்ற கோஷங்கள் மலிந்து மேடைக்கடைகள் அலங்கரிக்கப்பட்டு வசைபாடும் அரசியல் கலாச்சாரம் மலிந்துவிட்டது. முஸ்லிம் சமூகத்தின் இன்றைய இந்நிலைகள் எங்கு தள்ளிவிடுமோ என்ற நிலையில் தற்போது உள்ளது. 

    தற்கால சூழலில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை நன்கு உணரப்பட்டு உள்ளது. நம் சமூக இயக்கங்கள் இதன் உள்ளீர்ப்பு விடயங்களில் இருந்து விலகியே பயணிக்கின்றன. முஸ்லிம் சமூக ஒற்றுமையின் உருவாக்கம் மக்களின் மனங்களில் நன்கு உணரப்பட்ட விடயமாகவுள்ளது. தேர்தல் காலத்தில் மட்டும் மேடைகளும் மாலைகளும் வீராப்பு வசனங்களும் சந்தையில் மலிவாக மாறிவிட்ட பொருட்கள் போன்று காணப்பகின்றன. நாம் இன்று அதன் பயனை அடைந்துள்ளோமா என்பது தொடர் கேள்விக்குறியே. இவை நமது இருப்பில் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை ஆழமாக சிந்தனை செய்யத்தவறிவிட்டோம்.  

    நாட்டின் நாலா பக்கமும் பல பிரச்சினைகள் நல்லாட்சியிலும் நமக்கு இப்படியா என வியப்பில் இருக்ககிறது எமது சமூகம். நாட்டின் பொருளாதாரம் ஓர் புறமிருக்க காலத்திற்கு காலம் உணரப்பட்ட முஸ்லிம் ஒற்றுமை அரசியல் நிலையானது அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சுயநல அரசியல் என மாறிவிட்டது. கடந்த மாகாணசபை தேர்தலில் றிஷாட் பதியுதீன் ரவூப் ஹக்கீம் ஆகியோரால் ஊவா மாகாண சபை தேர்தலில் ஓர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பின் இது கலைக்கப்பட்டது அன்றைய மலையக பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கவா அல்லது எதற்கு என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. 

    இன்று மதவாத தீவிரவாதம் விரித்தாடும் நிலையில் தம்புள்ளை பள்ளிவாயல் தொடக்கம் நம்மவர் காணிப் பிரச்சினை வரை இவர்களின் நடவடிக்கை என்ன என்பது கேள்விக்குறியே. நாம் எதற்கு இவர்களுக்கு வாக்களித்தோம் என்ற பேச்சு இன்று சந்திகளில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்களும் காலத்திற்கு காலம் தேர்தலின் போது கரையோர மாவட்டம் வில்பத்து பிரச்சினை முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தென்கிழக்கு அலகு உள்ளாட்சி சபை என உணர்வாய் பேசுகிறார்கள். நாங்கள் யாருக்கும் பயந்தவர் அல்லா் என மக்களின் உணர்வுகளுக்கு சாயமூட்டுகிறார்கள் தேர்தல் முடிந்த கையோடு கப்பலேறி வெளிநாடு செல்கிறார்கள். இனி அடுத்த விடுமுறையை எப்போது நிறுவனம் தரும் என்ற நிலையையே காணக்கூடியதாய் உள்ளதேயன்றி தமது பிரச்சினையை முன் நின்று பேசுவதற்கு பயத்துடன் மௌனித்து விடுகிறார்கள். முஸ்லிம்கள் மீது இன்று பேரினவாத சக்திகள் காழ்ப்புணர்வுடன் செயற்படுகின்றன. முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் பல பிரச்சினைகள் இன்னும் தலைவிரித்தாடியபடி உள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவது யார்? இவற்றின் உள்நோக்கம் என்ன? என்ற கேள்வியே சுட்டி நிற்கின்றது.

    இன்று நமக்கு முஸ்லிம் கூட்டமைப்பு எதற்கு என்றும் தேர்தலில் எங்களுக்கு எங்கள் கட்சி இருக்கிறது. நாங்கள்தான் எல்லாவற்றையும் பார்ப்போம் என கூறுகின்றனர் முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள்  காங்கிறஸ் மற்றும் தேசிய காங்கிறஸ் போன்ற கட்சியினர் இன்று அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபடவைப்பதன் மூலமே முஸ்லிம்களாகிய எமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது மக்களின் உரிமைகளுக்காய் பல சீர்வரிசைகளை உதரிவிட்டு  பயணிக்கின்றது. தமது உரிமை விடயத்தில் எல்லா கட்சிகளும் விரும்பும் ஒருவரே  தமிழ் தேசிய கூட்டமைப்பில் தலைராக உள்ளார். இதே போன்று  சமகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 
    தலைமை பதவியென்பது சுகபோகங்களை அனுபவிப்பதற்கு அல்ல மாறாக நம் சமூக முன்னேற்றத்தையும் தலைவிதியையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறவேண்டும். தலைவர் என்பவர் ஆளுமை மிக்கவராகவும் தைாியமாக எழக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும். குறிப்பாக அல்லாஹ்விக்கு அஞ்சும் தலைவராக இருக்க வேண்டும். ஓர் முறை நபி(ஸல்) அவர்களிடம் அபூதர்(ரழி) பதவியை வேண்டி நின்றார். அப்போது நபியவர்கள் வழங்வில்லை. பதவி என்பது எல்லோரும் ஆளும் விடயமல்ல அதற்கு தகுதியானவர் நல்ல திட்டங்களை வகுப்பவரே என நபியவர்கள் விளக்கினார்கள். மேலும் தலைமை என்பது அமானித விடயமாகும். தலைவர் யாராக இருந்தாலும் கட்டுப்படுபவனே தலைமைத்துவத்திற்கு உண்மையானாவான். கட்சிப்பற்றிற்கு அப்பால் சென்று சமூக பற்று எனும் ஆயுதத்தை கடைபிடிப்பதன் மூலம் இதனை நாம் வெல்ல முடியும்.

    நானா? நீயா? என்ற அகந்தையை விட்டு விடுங்கள். இன்று நெருக்கடிகள் அதிகமாகவே உள்ளன. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். இதற்கு உலமாக்கள் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் போன்றோரை  உள்வாங்கி கலந்து ஆலோசனை செய்து ஓர் பொது முடிவை எடுக்க வேண்டும். இது நமது சமூகத்தின் உரிமைகளை தக்க வைக்க ஓர் பலமான ஆயுதமாக மாறும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சமகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top