பொலன்னறுவையில் சிறுநீரக நோயாளர்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலையின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.
சிறுநீரக நோயாளிகளுக்கென தெற்காசியாவில் நிர்மாணிக்கப்படும் மிகப் பெரிய வைத்தியசாலை இதுவாகும். சீன அரசாங்கம் இதற்காக 120 கோடி ரூபாவை வழங்கவுள்ளது.
சிறுநீரக நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சைகள் உட்பட சகல சேவைகளையும் இந்த வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ள முடியும்.
200 நோயாளர்களுக்கான கட்டில்களை இந்த வைத்தியசாலை கொண்டிருக்கும் வெளிநோயாளர் சேவை பிரிவும் இதில் அமையவிருக்கிறது.

0 comments:
Post a Comment