• Latest News

    December 05, 2017

    தங்காலை குடாவெல்ல அரச வங்கியொன்றினுள் கொள்ளைக்குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாடிக்கையாளர் ஒருவர் காயம்

    தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை – தங்காலை குடாவெல்ல பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றினுள் கொள்ளைக்குழு நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

    இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.45 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

    குறித்த வங்கிக்குள் நுழைந்த முகமூடி அணிந்திருந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

    அத்துடன் வங்கியிலிருந்த 50 தொடக்கம் 60 இலட்சம் ரூபாவை அவர்கள் கொள்ளையிட்டுச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பவத்தில் வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தங்காலை குடாவெல்ல அரச வங்கியொன்றினுள் கொள்ளைக்குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாடிக்கையாளர் ஒருவர் காயம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top