மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளநீர் தேங்கியுள்ளதால் முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது.குறித்த மகத்துவாரத்தினூடாக முதலைகள் கடலோடு சங்கமிப்பதால் மட்டக்களப்பு மாவட்ட கடலில் முதலைகளின் வருகை அதிகரித்துள்ளன
.இன்று காலை காத்தான்குடி கடலில் நடமாடிய முதலைகளால் பொது மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர்.கடற்கரைக்கு வரகை தருவோரும் மீன்பிடியில் ஈடுபடுவோரும் அச்சமடைந்துள்ளார்கள்.இந்த முதலைகள் கரைக்கு வராமல் கடல் பகுதியிலேயே நடமாடுவதை அவதானிக்க முடிகிறது.
குறித்த முதலைகள் நடமாட்டத்தை அவதானிக்க பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் கடற்கரைக்கு முதலையை பார்வையிட வந்தனர்.

0 comments:
Post a Comment