களுவாஞ்சிக்குடி ,பட்டிருப்பு தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் பெரு விளையாட்டுக்களுள் ஒன்றான கிறிக்கட் போட்டியில் நாவலர் இல்லம் ( மஞ்சள்) இவ்வருட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை மைதானத்தில் கடந்த வியாளக்கிழமை ( 25 ) இல்லங்களுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப் போட்டி ஆரம்பமானது.
முதல் அரையிறுதிப் போட்டியில் நாவலர் இல்லம் ( மஞ்சள்) 8 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 72 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விபுலானந்தர் இல்லம் ( சிவப்பு ) 8 ஓர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 34 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டனர். இப்போட்டியில் நாவலர் இல்லம் ( மஞ்சள்) வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இராமகிருஸ்னா ( நீலம் ) இல்லம் 8 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா ( பச்சை ) இல்லம் 8 ஓவர்களில் 1 விக்கட்டினை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்று 4 ஓட்டங்களினால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நாவலர் இல்லம் ( மஞ்சள்) 8 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா ( பச்சை ) இல்லம் 8 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. நாவலர் இல்லம் ( மஞ்சள்) 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்று இவ்வருட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.
இப்போட்டி நிகழ்வுகளுக்கு பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா ,,பாடசாலை பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன், ,எம்.சுவேந்திரராஜா, ரீ.ஜனேந்திரராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.



0 comments:
Post a Comment