2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு பாடநூல்களை விநியோகிக்கும் தேசிய நிகழ்வு கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் நடைபெற்றது
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் .பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், மாணவிகளுக்கு பாடநூல்களை வழங்கினார்.
நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அரசாங்கம் இலவசமாக வழங்கும் பாடப்புத்தகங்களை குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது மாணவர்கள்பயன்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.
இது நல்ல நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என சுட்டிக்காட்டினார்.
இலவசக் கல்வியை முடக்கி, மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்களை விற்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக சில தரப்புக்கள் குற்றஞ்சாட்டியிருந்தன. அந்தக் குற்றச்சாட்டுக்களை கல்வி அமைச்சர் இதன்போது முற்று முழுதாக நிராகரித்தார்.

0 comments:
Post a Comment