ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு வருடங்கள் பூர்த்தியாகும் வரையில் ஜனாதிபதியாக கடமையாற்றுவதற்கு எதுவித முட்டுக்கட்டையும் கிடையாது என சட்டமா அதிபர் நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியல் யாப்பின் மீதான 19வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுகின்ற போதிலும்இ அந்தத் திருத்தம் அமுலாவதற்கு முன்னதாக ஜனாதிபதி ஆறு வருடங்களுக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணிஜயந்த ஜயசூரிய நேற்று உயர்நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
தமது பதவிக் காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிவதற்காக ஜனாதிபதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது சட்டமா அதிபர் விளக்கமளித்தார். இந்த விசாரணை 5 நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாமின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இந்தக் கருத்துக் கோரல் தொடர்பாக சட்டத்தரணிகள் தெரிவித்த கருத்துக்களை செவிமடுத்த நீதிபதிகள் குழாம்இ இதுபற்றிய சமர்ப்பணங்கள் எதுவும் இருந்தால் இன்று நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவித்தது. கருத்தக் கோரல் தொடர்பான தீர்ப்பை உயர்நீதிமன்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதிக்கு அறிவிக்க உள்ளது.

0 comments:
Post a Comment