ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் அசாத் சாலி, நேற்று முன்தினம் மதத்தலைவர்களை சந்தித்து ஆசிப்பெற்றார்.
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள ஜமியத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு அசாத் சாலி நேற்று முன்தினம் மாலை சென்றிருந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அசாத் சாலி…
எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த தேர்தலை முன்னோக்கி கொண்டு சென்று, தேர்தல் சட்டங்களை மீறாது நியாயமான தேர்தலொன்றுக்குச் செல்வதே எமது எதிர்பார்ப்பாகும்.
இதேவேளை, கொழும்பு கங்காராம விஹாரைக்கும் அசாத் சாலி சென்று ஆசிப்பெற்றார்.
இதன் போது அசாத் சாலி தெரிவித்த கருத்து….
யார் திருடன் என்பதை மக்கள் கண்டுகொண்டனர். திருட்டுக்கும்பலுடன் வருகை தந்து மஹிந்த, ரணில் திருடன் என கூச்சலிடுகின்றார். மறுபுறம் ரணில் தனது உரையின் பின்னர், நான் கூச்சலிடுவேன் நீங்களும் கூச்சலிடுங்கள் என்று கூறுகின்றார். நாட்டின் சட்டத்திற்கு அமைய ஒரு கோடி ரூபாவை திருடினாலும், ஒரு ரூபாவை திருடினாலும் அது திருட்டாகும். அதில் மாற்றமில்லை. இந்த திருடர்களை சிறைக்கு அனுப்புவதற்கு மூன்று வருடங்களாக எதனையும் செய்யவில்லை. இந்த திருடர்களை காப்பாற்றுவதற்காக சென்று பிரதமர் தானாகவே சிக்கிக்கொண்டார்.

0 comments:
Post a Comment