- எம்.ஐ.எம்.அஸ்ஹர் -
பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிக்குடியில் பாடசாலையில் இவ்வருடம் அனுமதிபெற்ற முதலாம் தர மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் வரவேற்கும் ” வித்தியாரம்ப விழா பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.ஞானராஜா பிரதம அதிதியாகவும் பாடசாலை பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன், எம்.சுவேந்திரராஜா ,ரீ.ஜனேந்திரராஜா பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எஸ்.யோகநாதன். பழைய மாணவர் சங்க தலைவர் கு.நாகேந்திரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
சிரேஸ்ட மாணவர்கள் முதலாம் தர மாணவர்களை மாலையிட்டு வரவேற்று பிரதான மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.ஆசிரியர்களும் ,பெற்றோர்களும் ,கல்விசாரா ஊழியர்களும் ,உத்தியோஸ்தர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றதுடன் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன



0 comments:
Post a Comment