• Latest News

    January 16, 2018

    ஹக்கீம், தனக்கு அன்சில் கல் எறிவதாக ஒப்பாரி வைக்கும் பரிதாபம்

    (ஹபீல் எம்.சுஹைர்)
    அமைச்சர் ஹக்கீம் பாலமுனை கூட்டத்தில் வைத்து அன்சிலை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளதாக குறிப்பிடுகிறார். உண்மையில் இங்கு பரிதாபத்துக்குரியவர் யார்? தனது கூட்டத்தை நடத்த விடாமல் கல் எறிகிறார்கள், சைன் எறிந்து மின்சாரத்தை துண்டிக்கின்றார்கள் என தனது முகப் புத்தகத்திலும் ஊடகங்களிலும் புலம்புபவரா அல்லது அன்சிலா?  இப்படி புலம்பியாவது ஓரிரு வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியுமா என முயற்சி செய்கிறார்கள். உங்களைப் பார்த்து பரிதாபப்பட இங்கு யாருமில்லை. அத்தனை வேலைகள் செய்துவிட்டு சென்றுள்ளீர்கள்.

    மிகக் குறுகிய நேரத்தில் பயணம் செய்ய வேண்டிய தூரத்தை, மக்கள் இடை மறித்ததன் காரணமாக  பல கிலோ மீட்டர் தூரம் பயணித்த அமைச்சர் ஹக்கீம் பரிதாபத்துக்குரியவரா அல்லது அன்சில் பரிதாபத்துக்குரியவரா? முன்னர் என்றால், தங்களது உயிரை கொடுத்தாவது அமைச்சர் ஹக்கீமை போராளிகள் உரிய இடம் சேர்த்திருப்பார்கள். இப்போது அப்படியான போராளிகள் யாருமே இக் கட்சியில் இல்லை. அனைவரும் ஏதாவது ஒன்றை நோக்காக கொண்டவர்கள். அவர்கள் உயிரை எல்லாம் பணயம் வைக்க மாட்டார்கள். உயிரை கொடுத்து காப்பாற்றுமளவு தலைவரும் இல்லையே!

    உண்மையில் அமைச்சர் ஹக்கீம், தனது அரசியல் வீழ்ச்சி குறித்து வெட்கப்பட வேண்டும். ஏனையோரை பார்த்து வெட்கப்பட முன், முதலில் தன்னை தானே பார்த்து வெட்கப்பட வேண்டும். அமைச்சர் ஹக்கீம், தானாக ஒதுங்கினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையாவது காப்பாற்றிக்கொள்ளலாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹக்கீம், தனக்கு அன்சில் கல் எறிவதாக ஒப்பாரி வைக்கும் பரிதாபம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top