• Latest News

    January 12, 2018

    அட்ரஸ்’ இல்லாமல் போன ஹாபிஸ் நஸீர் அஹமட்!

    ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு சொந்தமான காணியை மோசடியான முறையில் தனக்கு சொந்தமான யுனிட்டி பில்டர்ஸ் கம்பனிக்கு உடைமையாக்கியமை உள்ளிட்ட பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனத் தெரிவித்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றன.
    கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி லங்கா ஜயரத்ன அவர்கள் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்ற போது,“முன்னாள் முதலமைச்சரின் முகவரியைக் கண்டுபிடிக்க முடியாததன் காரணமாக அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை” என கொழும்பு மோசடிப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் அங்கு தெரிவித்துள்ளனர்.
    இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பொலிஸார் தரப்பில் வெளியிடப்படும் அதி உச்ச நகைச்சுவைமிக்க ஜோக்காவே இதனை நான் கருதுகிறேன்.
    ஒரு பிரபல மனிதர், அதுவும் ஆட்சி, அதிகாரம் எதுவும் இன்று இல்லாத நிலையில் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள ஒருவரான ஹாபிஸ் நஸீரின் முகவரியை இவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்றால் மோசடி “புலனாய்வு” பிரிவு என்ற பெயருக்கே லாகற்றவர்கள் கூட இந்தப் பிரிவில் உள்ளனரோ தெரியாது என எனக்குத் தோன்றுகிறது.
    சாதாரண நபர் ஒருவர் ஆயிரம் ரூபா காசோலையைக் கொடுத்து மோசடி செய்தால், அந்த நபருக்கு சரியான அட்ரஸ் கூட இல்லாவிட்டாலும் தேடிப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொலிஸார், ஹாபிஸ் நஸீர் என்ற பிரபலத்தின் முகவரியைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளது என்று கூறுவது கேலிக்கு உரியதும் நீதிமன்றத்தை ஏமாற்றும் ஒரு விடயமுமாகும்.
    மறுபுறம், இந்த அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாகவும் (முஸ்லிம் காங்கிரஸுடன் அல்ல) ரணிலுடன் மிக மிக நெருக்கம் கொண்டவராகவும் காணப்படும் ஹாபிஸ் நஸீர் விடயத்தில் பொலிஸார் ஓடி ஒளிந்து விளையாடுவார்களானால் அதன் பின்னணியில் அரசியல் தலையீடுகள் உள்ளனவோ என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
    கோட்டை நீதிமன்ற நீதிவான் திருமதி. லங்கா ஜயரத்ன அவர்கள் மிகச் சிறந்த நீதிவான்களில் ஒருவர், அவர் எந்த விடயத்திலும் நியாயமான தீர்ப்புகளையும் கண்டிப்பான உத்தரவுகளையும் வழங்கும் சிறந்த நீதியாளர் என்பது எனக்குத் தெரியும். தீர்ப்புகள் வழங்கும் விடயங்களில் எந்தச்சார்புக் கொள்கையையும் கொண்டிராத ஒருவர்.
    அவ்வாறான ஒருவரிடமே பொலிஸார் இவ்வாறு தெரிவித்து வழக்கு விசாரணைகளைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனரோ தெரியாது. பொலிஸாரும் சில வேளைகளில் அரசியல் அழுத்தங்களுக்கும், அதிகார வர்க்க உத்தரவுகளுக்கும் அடிய பணிய வேண்டிய களநிலைக் கைதிகளாகி விடுவதும் உண்டு.
    கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி லங்கா ஜயரத்ன அவர்கள் பொலிஸாரை நோக்கி, “முதலாம் சந்தேக நபர் அறியப்படாத ஒரு நபர் அல்லர் என தெரிவித்திருந்ததனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
    இதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் முகவரிகளை எதிர்காலத்திலாவது கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுவார்களானால் அந்தப் பணிகளை இலகுபடுத்தும் நோக்குடன் அவரது ஏறாவூர் வீடு, கொழும்பு, கிருலப்பனை ரயில்வே அவெனியூ வீடு, கிங்ஸி வீதி மற்றும் தாருஸ்ஸலாம் அலுவலகங்கள் ஆகியவற்றின் முகவரிகளையும் அவரது இரண்டு தொலைபேசி இலக்கங்களையும் மோசடி புலனாய்வுப் பிரிவுக்கு நான் அனுப்பி வைத்து உதவுகிறேன்.
    அல்லது அவர் எங்கு, எப்போது எந்த நேரத்தில் உள்ளார் என்பதனை நான் துல்லியமாக உளவு பார்த்து அங்கு பொலிஸாரை அழைத்துச் சென்று அவரைக் கைது செய்யவோ அல்லது அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வோ என்னால் பொலிஸாருக்தகு உதவிகளை வழங்க முடியும்
    -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அட்ரஸ்’ இல்லாமல் போன ஹாபிஸ் நஸீர் அஹமட்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top