எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்காளர் அட்டைகளும், வாக்குச் சீட்டுக்களும் 8 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தபால் திணைக்களத்தின் ஊடாக இன்று முதல் முன்னெடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பிற்கான அட்டைகளை நேற்றைய தினம் விநியோகிக்கப்படவிருந்தன.
இருந்த போதிலும் தபால்மூல வாக்களிப்பு அட்டைகளை அச்சிட்டு வழங்குவதற்கான பணிகளை அரச அச்சகத் திணைக்களம் தாமதப்படுத்தியதால் அந்த செயற்பாடுகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டன.
இதேவேளை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை எதிர்வரும் 18ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment