• Latest News

    January 25, 2018

    சின்னம் சூட்டும் நிகழ்வு

    - எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

    ளுவாஞ்சிக்குடி ,பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு  பாடசாலை திறந்தவெளியரங்கில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.

    பாடசாலை பிரதி அதிபர்களான  என்.நாகேந்திரன் ,எம்.சுவேந்திரராஜா ,ரீ.ஜனேந்திரராஜா ஒழுக்காற்று குழுஆசிரியர்கள் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள் ,மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    சிரேஸ்ட மாணவத் தலைவராக பீ. மயுரவேலும் ,சிரேஸ்ட மாணவத் தலைவியாக என். ஜதுசியாவும், உதவி மாணவத் தலைவராக ஆர்.விதுர்சனும், உதவி மாணவத் தலைவியாக வீ. ரம்யாவும் நியமனம் செய்யப்பட்டதுடன் இவர்களுக்கான சின்னங்களை அதிபர் மற்றும் பிரதி அதிபர்களும் ஏனைய மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களை பாடசாலை ஆசிரியாகளும் சூட்டினார்கள்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சின்னம் சூட்டும் நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top