நேற்று இரவு அம்பாரை ஜும்ஆப்பள்ளி வாசல் மீது இனந் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற் கொண்டுள்ளார்கள். இத்தாக்குதலை நாட்டின் இன ஐக்கியத்தை குழப்ப நினைக்கும் பௌத்த பெரும்பான்மையினரே மேற் கொண்டிருக்க வேண்டுமென்று முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள்.
நேற்று இரவு அம்பாரை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் உணவுப் பொருளை வாங்கிய சிங்களவர்கள் சிலர் ஹோட்டல் உரிமையாளருடன் தகறாற்றில் ஈடுபட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்தே பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளதுடன், அம்பாரை நகரில் அமைந்துள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும், குறிப்பிட்ட ஹோட்டலும் தாக்கபட்டுள்ளன. இதனால், பல இலட்சம் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிவாசலின் சுற்று மதில்களை உடைத்துள்ளதுடன், பள்ளிவாசலின் கண்ணடிகளையும் உடைத்துள்ளார்கள். குர்ஆன் பிரதிகளையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்கள். மேலும், பள்ளிவாசலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் எரித்தும், சேதப்படுத்தியுள்ளார்கள்.
இச்சம்பவத்தினால் அம்பாரை நகரில் இன்று பதட்ட நிலை காணப்பட்டது. நிலையை நேரில் சென்று பார்வையிட்ட பிரதி அமைச்சர் எச்எ.எம்.எம்.ஹரீஸ் ஊடங்களுக்கு கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு நின்ற கும்பல் ஒன்று பிரதி அமைச்சர் ஹரீஸோடு தர்க்கத்தில் ஈடுபட்டதோடு , அவரை தாக்கவும் முற்பட்டுள்ளார்கள். இதனால், ஹரீஸ் பொலிஸாரின் பாதுகாப்போடு அங்கிருந்து சென்றார்.
இதே வேளை, பள்ளிவாசலுக்கு இராணுவத்தினரும், பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமைகயில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
அம்பாரை இன்று காலை முதல் காணப்பட்ட பதற்றம் காரணமாக அம்பாரைக்கு வேலைக்கு சென்ற அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் இன்று காலை 10 மணிக்கு முதலே வீடுகளுக்கு திரும்பினார்கள்.



































0 comments:
Post a Comment