நடந்து
முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் கிடைக்கபெற்ற முடிவுகளின் அடிப்படையில்
மலைகத்தில் பாரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டள்ளது அது தான் உள்ளுராட்சி
சபைகளை மலையக மக்கள் ஆளும் நிலை. இந் நிலையை முறையாக பயண்படுத்திக் கொள்ள
வேண்டும் என கூறுகின்றார் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ்
முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான
வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்
நடந்து முடீந்த தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்
இந்தியாவில்
இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைகளாக கொண்டு வரப்பட்ட மக்கள்
தற்போது பல்வேறு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கின்றனர். இதில்
அரசியல் ரிதியில் தற்போது முன்ளேறி உள்ளுராட்சி சபைளை ஆளும் நிலை
ஏற்பட்டுள்ளமை வரவேற்கதக்க ஒன்றாகும். இந் நிலையில்; நான் வெற்றி நீ வெற்றி
என சண்டை போட்டுக் கொள்ளமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
1991
ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி
பெற்று முதல் முதலாக நுவரெலியா பிரதேச சபை தலைவராக தெரிவு செய்யபட்டு சேவை
செய்தவன் என்ற நிலையில் கூறுகின்றேன் அப்போது தோட்டங்களுக்கு வேலை செய்ய
முடியாது. உள்ளுராட்சி சபைகளும் குறைவு. உறுப்பினர்களின் எண்ணிக்கையம்
குறைவு.
ஆனால் தற்போது எங்களது தமிழ் முற்போக்கு
கூட்டணியின் முயற்சியால் பிரதேச சபைகள் நுவரெயியா மாவட்டத்தில் மேலும் 04
ஆக அதிகரிக்கபட்டுள்ளது. தோட்டங்களுக்கு வேலை செய்ய முடியாது என்ற
உள்ளுராட்சி சபை சட்டத்தின் 33 ஆம் பிரிவு திருத்தபட்டு தோட்டங்களுக்கும்
வேலை செய்யலாம் என்ற நிலை உருவாக்கபட்டுள்ளது.. வட்டார அடிப்படையில்
ஒவ்வொறு வட்டாரத்திலும் மக்களுக்கு சேவை செய்ய உறுப்பினர்கள் உள்ளார்கள்.
இதை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இதற்கு என்னால் ஆன
பூரண ஒத்துழைப்பை வழங்க தயார்.
மக்களுக்கு
முறையாக சேவை செய்யதவர்களுக்கும் கொடுத்த வாக்குரிதை நிறைவேற்றதவர்களுக்கு
முன்னைய உட்பட தற்போதய தேர்தல் முடீவுகள் ஒரு பாடமாக அமைந்தள்ளது இதை
பார்த்தாவது முறையாக நடந்துக் கொள்ள வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும்
உள்ளது. அத்துடன் மக்கள் தெளிவாக இருகின்றார்கள் அரசியல் வாதிகள் தெளிவாக
இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தேர்தல் நல்ல உதாரணமாக இருப்பதால் நாம்
அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மக்கள் தங்களக்கு சேவை செய்கின்ற
சொன்னதை நிறைவேற்றுகின்ற களவு பொய் செய்யாத நம்பிக்கைக்குறிய கை
சுத்தமானவர்கயே விரும்புகின்றனர். அவ்வாறானவர்களில் பெரம்பாலானோரே
வெற்றியும் பெற்றுள்ளனர். இவர்கள் இதை பயன்படுத்துடன் மேலும் அதிகரித்துக்
கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். எது எவ்வாறாயினும் மலையத்தில
தமிழர்கள் தோட்டதுறையயை சார்ந்தவர்கள் சபைகளின் தலைவர்களாக தெரிவு
செய்யபட்டு ஆளும் நிலை ஏற்பட்டுள்ளமை சந்தோசமாக விடயமாகும் என்று
கூறினார்.

0 comments:
Post a Comment