• Latest News

    February 28, 2018

    நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பு

    சஹாப்தீன் -
    நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களை நேற்று அவர்களின் கடமை நேரத்தில் ஒரு குழுவினர் தாக்கியமையைக் கண்டித்தும், அவர்களை கைது செய்யுமாறு வேண்டியும் இன்று நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டார்கள்.
    நேற்று நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள தனியார் காணி ஒன்றிக்கும், மயான காணிக்கும் இடையிலான பிரச்சினையை தீர்ப்பதற்காக நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் முகம்மட் அன்சார் தலைமையில் காணி உத்தியோகத்தர், கிராம சேவகர் உட்பட இன்னும் சில அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றார்கள்.
    இதன் போது அங்கு கூடிய பொது மக்களில் ஒரு குழுவினர் உதவிச் செயலாளர் முகமட் அன்சாரையும், ஏனைய உத்தியோகத்தர்களையும் தாக்கியுள்ளார்கள். இதனால், சிறு காயத்திற்குள்ளான பிரதேச செயலாளர் நேற்று நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு வேண்டியே இன்;று நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டார்கள்.







    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top