• Latest News

    March 02, 2018

    நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தாக்கியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 21 பேருக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல்

    மயான பூமிக்கும் தனியார் காணி ஒன்றுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி குறிப்பிட்ட பிரச்சினை உள்ள நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்திற்கு சென்ற நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் முஹமட் அன்னசார் மற்றும் உத்தியோகத்தர்களை தாக்கியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 21 பேரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (02.03.2018) 14 நாள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    குறிப்பிட்ட காணிகள் பற்றி விபரங்களை வழங்குமாறு சம்மாந்துறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைவாகவே உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர்கள் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

    எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் இந்த வழங்கு விசாரணைக்கு எடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தாக்கியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 21 பேருக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top