• Latest News

    April 20, 2018

    இன்றுமுதல் முச்சக்கரவண்டி பயணங்களுக்கு பற்றுசீட்டு

    முச்சக்கர வண்டி பயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதனை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

    கட்டணச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 011 2 69 68 90 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும்.

    முச்சக்கர வண்டிகளில் பல்வேறு கட்டணங்கள் அறிவிடுவதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதால் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வருகின்ற  6 மாத காலப்பகுதிக்குள் பற்று சீட்டு வழங்ககூடிய மீட்டர்  பொறுத்தப்பட வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

    அத்தோடு வழங்கப்படும்  பற்று சீட்டில் எவ்வளவு தூரம் பிரயாணம் மேற்கோள்ளப்பட்டது, மற்றும் கட்டணம் குறித்த விபரம் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமெனவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்றுமுதல் முச்சக்கரவண்டி பயணங்களுக்கு பற்றுசீட்டு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top