• Latest News

    May 15, 2018

    950 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யபட்டு வருகின்றன

    2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரை காலப்பகுதியில் கவ்வி அமைச்சின் 950 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவினால் பெருந்தோட்ட பாடசாலைகளின் உட்கட்;மைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த  அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் மத்திய மாகாணத்தில் உள் வாங்கப்பட்டுள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் மீப்பே தேசிய கல்வியற் நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ் மீளாய்வு கூட்டத்திற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கல்வி அமைச்சின் பாடசாலைகளின் கட்டட அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் கலாநிதி அபேசுந்தர அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை அபிவிருத்தி செயற்திட்;டத்தின் பணிப்பாளர் கே.பத்மநாதன் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் திருமதி சபாரஞ்சன் உட்பட மாகாண கல்வி பணிப்பாளர்கள் செயற்திட்;டத்திற்கு உள்வாங்கபட்ட பாடசாலைகளின் அதிபர்கள் கலந்துக் கொண்டார்கள்.
    தொடர்ந்து மீளாய்வு கூட்;டத்தில் பாடசாலைகளில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் குறை நிறைகள் மேலும் பாடசாலைகளுக்கு தேவையான வளங்கள் பற்றி ஆராய்யப்பட்டது. இதன் மூலம் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டம் மூலம் மேலும் நிதி ஒதுக்கீடுகள் மேற்க் கொள்ளபட்டன. கல்வி அமைச்சின் வரலாற்றில் முதற் தடவையாக பெருந் தொகையான நிதி ஒதுக்கீட்;டில் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டம் இதுவே முதற் தடவையாகும். அத்துடன் கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்திற்கு மலையத்தில் உள்ள பெருந்தோட்ட பாடசாலைகள் 843 இல் 770  உள் வாங்கபட்டு 3000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யபடுகின்றன. அதேபோல் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஆளனி பெற்றுக் கொடுத்தல் ஆளனியினருக்கான பயிற்சிகள் உட்பட பாட ரீதியான மேம்பாட்டுத்திட்டங்கள்  முன்னெடுக்கபட்டு வருகின்றன. 





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 950 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யபட்டு வருகின்றன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top