• Latest News

    May 18, 2018

    ராஜிதவின் கருத்து தொடர்பில் ஜனாதிபதியால் விசாரணை வேண்டும்

    இராணுவத்தினருக்கு எதிராக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்து தொடர்பில் ஜனாதிபதியால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இல்லையெனில், அக்கருத்து சர்வதேசத்திற்கு அரசாங்கத்தின் கருத்தாகவே எதிரொலிக்குமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.

    அத்துடன், நாட்டின் நல்லிணக்கத்திற்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியமைக்காக ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பொரளையில் உள்ள என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிசிர ஜயக்கொடி, டிலுனு அமுனுகம மற்றும் சட்டத்தரணி பிரேம்நாத் சீ தொலவத்த ஆகியோரே இவ்வாறு தெரிவித்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ராஜிதவின் கருத்து தொடர்பில் ஜனாதிபதியால் விசாரணை வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top