• Latest News

    July 30, 2018

    நிந்தவூர் பெருமிதம்: ஆயுர்வேத வைத்தியத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுச் சாதனை

    ஆயுர்வேத வைத்தியத்துறையில் நிந்தவூரைச் சேர்ந்த டாக்டர் .ஜுனைடீன் முஹம்மது நஜீப் கலாநிதிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த 03 வருடங்களாக கலாநிதிப் பட்டப் படிப்பை International Research University - India  பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டு கடந்த 09.05.2018 ஆயுர்வேத வைத்தியத்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

    அம்பாரை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் மிகவும் பிரபல்யம் பெற்ற ஆயுர்வேத வைத்தியரான இவர் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதன் மூலமாக நிந்தவூர் பிரதேசம் மகிழ்ச்சியடைகின்றது.

    பாரம்பரிய மருத்துவ முறைகளுள் ஆயுர்வேத மருத்துவமும் ஒன்றாகும். இன்று உலகில் மக்களிடையே ஆயுர்வேத மருத்துவம் அதிக செல்வாக்குப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஐரோப்பியர்கள் கூட இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து ஆயுர்வேத மருவத்துவத்தின் மூலமாக தங்களது நோய்களை குணப்படுத்திக் கொண்டு செல்லுகின்றார்கள். இலங்கையில் பல ஆயுர்வேத வைத்தியர்கள் உள்ளார்கள். இவர்களில் பலர் பரம்பரை பரம்பரையாக இவ்வைத்தியத்தினை மேற்கொண்டு மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் மிகவும் பிரபல்யம் பெற்ற ஆயுர்வேத வைத்தியராக ஜுனைதீன் முகம்மது நஜீப் திகழ்கின்றார். ஆறாவது தலைமுறையாக ஆயுர்வேத வைத்தியத்தில் இவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

    இவர் மனநோய்கள், பாரிசவாதம், இடுப்புவலி, முழங்கால் வலி, கடுப்பு, திமிர்வு, நீரழிவு, ஆண்மைக் கோளாறுகள், ஆண் - பெண் மலடு, குடற்புண் போன்றவற்றிக்கு விசேட தேர்ச்சி பெற்றவராக உள்ளார். இந்நோய்களினால் பாதிக்கப்பட்ட பலர் இவரிடம் வைத்தியம் பெற்று குணமாகியுள்ளார்கள். ஆயுர்வேத வைத்தியத்தில் பல புதிய மருந்துகளையும் இவர் கண்டு பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

    வைத்தியத்துறையில் தீராத நோய்களுக்கு புதிய மருந்துகளை கண்டு பிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைக் கொண்டுள்ள இவர் நோய்கள் பற்றிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பரம்பரை வைத்தியரான இவரின் முன்னோர்கள் ஆயுர் வேத வைத்தியத்துறையில் மிகவும் பிரபல்யம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உமர்கத்தா வைத்தியர் (1839 – 1909), மீராலெப்பை மோதீன் (1855 – 1925), கலந்தர் லெப்பை போடி உமர்கத்தா (1877 – 1946), உமர்கத்தா மீராலெப்பை (1902 – 1968), மீராலெப்பை ஜுனைதீன் (1929 – 1991) ஆகியோர்கள் இவரின் பரம்பரையினராவார்கள். இந்த வரிசையில் ஜுனைதீன் முகம்மது நஜீப் 1990ஆம் ஆண்டு முதல் ஆயுர்வேத வைத்தியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

    1984ஆம் ஆண்டு கொழும்பு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பகுதி நேர வகுப்புக்களில் கல்வி பயின்று சித்தி பெற்றார். பின்னர் தனது தந்தையாகிய வைத்தியர் மீராலெப்பை ஜுனைதீனிடம் ஆயுர்வேத மருத்துவப் பயிற்சிகளைப் பெற்றார்.

    1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற மனநோய் விசேட பிரிவு பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தார். வடகிழக்கு மாகாணத்தில் இவர் மாத்திரமே சித்தி பெற்றதாகவும் இவர் எம்மிடம் தெரிவித்தார்.

    University of Missouri International Centre ஆல் 2005.07.22ஆம் திகதி நடத்தப்பட்ட Psychosocial Trauma கருத்தரங்கில் தமது ஆக்கங்களை வெளியிட்டு பாராட்டுக்களைப் பெற்றார். அத்தோடு இவருக்கு விசேட நற்சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும், வருடாந்தம் நடைபெற்று வரும் மனநோய் ஆயுர்வேத விசேட வைத்தியர்களுக்கான கருத்தரங்குகளில் கலந்து கொண்டு தமது புதிய மருத்துவ கண்டு பிடிப்புக்களை முன் வைத்தும் வருகின்றார்.
    28.05.2017 இல் ஆயுர்வேத விசேட மருத்துவம் மற்றும் பல விசேட துறைகளைச் சேர்ந்தவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இவர் தேசபந்து பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். அத்தோடு, International Asia Ayurvedic Medicine Research Award – India என்ற நிறுவனத்தினால் Vaidya Ratna Awardவிருதினைப் பெற்றார்.

    இந்த சாதனை வரிசையில் மற்றுமொரு மைற்கல்லாக  ஆயர்வேத வைத்தியத்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார் என்பது மகிழ்ச்சியான ஒன்றாகும்.

    அத்தோடு கடந்த 22.05.2018 BMICHஇல் தேசபந்து எனும் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

    ஆயுர்வேத வைத்தியத்துறையில் மிகவும் தேர்ச்சி பெற்ற இவரிடம் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து நோயாளர்கள் வருகை தந்து சிகிச்சை பெற்று சுகமடைந்துள்ளார்கள். 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பெருமிதம்: ஆயுர்வேத வைத்தியத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுச் சாதனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top