• Latest News

    August 02, 2018

    ஜனாஸாவும் - பொய் பித்தலாட்டமும் - பாகம் - 01

    அஸ்ஸலாமு அலைக்கும்
    எமதூரில் இன்று பயபக்தியுடன் பாவிக்கப்பட்டு வந்த ஜனாஸா என்ற வார்த்தை பல்வேறு தரப்பினரினாலும் வெறுப்பாகவும் விரக்தியுடனும் பாவிக்கக்கூடிய ஓர் வார்த்தையாக மாற்றப்பட்டுயிருக்கிறது.
    இதற்க்கு காரணம் 

    01. இஸ்வா அமைப்பின் ஜனாஸா நலன்புரி பிரிவு - ( உருவாக்கம் - 2011ம் ஆண்டு)
    02. நிந்தவூர் ஜனாஸா நலன்புரி சங்கம்  (உருவாக்கம் - 2017ம் ஆண்டு)
    இஸ்வா அமைப்பின் ஜனாஸா நலன்புரி பிரிவு

    உருவாக்கம் - 2011 - 7 வருடங்கள்
    எமதூரின் ஓர் சகோதரர் வயல் பிரதேசத்தில் மரணமடைந்த போது அவ் ஜனாஸாவை வீட்டுக்கு எடுத்து வருவதில் ஏற்பட்ட வாகனச் சிக்கலை உணர்ந்த இஸ்வா அமைப்பின் சகோதரர்கள் ஊருக்கு ஓர் வாகனம் அவசியம் என்பதை பலரிடமும் கருத்து பரிமாறல் செய்த போது அக்கறை இன்மையுடன் செயல்பட்டனர். சிலர் அதிக ஒத்துழைப்பும் வழங்கினர், பின்னர் 12 நாட்கள் கையில் ஊண்டியலுடன் வீடு வீடாக சென்று பல இலட்சங்களை சேர்த்தனர். அது போதுமானவையாக இருக்கவில்லை. பின்பு நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலுடன் பேசி 3 இலட்சத்தை பெற்று இன்று வரை சேவையிலுள்ள இவ்வாகனம் வாங்கப்பட்டது. இதுவே கிழக்கு மாகாணத்தின் முதலாவது ஜனாஸா வாகனம் என்ற  இடத்தையும் பெற்றது. 

    இவ்வாகனம் தொடர்பாக இஸ்வா அமைப்பு ஜூம்மா பள்ளிவாசலுடன் இருதரப்பினருடனான பூரண ஒப்புதலுடன் ஓர் உடன்படிக்கை மேற்கொண்டனர்.

    01. இது ஊரின் பொது சொத்தாகும். இஸ்வா அமைப்புக்கு செந்தமானது அல்ல. ஜும்மா பள்ளிவாசல்களுக்குரியது.
    02. இதனை பராமரிக்கும் பொறுப்பு முழுவதையும் இஸ்வா அமைப்பு மேற்கொள்ளும்.
    03. ஜனாஸா வாகன சேவை இடைநிறுத்தப்படின் அது பொது சொத்து என்ற அடிப்படையில்  நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலிடன் ஒப்படைக்கப்பட்டு பொது தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்.
    04. அதன் தரிப்பிடம் பொது இடமான ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் அமைக்கப்படல். அமைக்கப்பட்டுள்ளது.

    இதனடிப்படையில் இன்று வரை எவ்வித இடையூறுகள் இன்றி 400 க்கும் மேற்பட்ட ஜனாஸாக்களை வீடுகளுக்கு கொண்டு வரும் சேவையை கடந்த 8 வருடங்களாக செய்து வருகிறது, செய்து கொண்டும் வருகின்றது,

    மற்றும் கபன் துனி , பலகை . வைத்தியசாலையில் ஜனாஸாவை வெளிக்கொண்டுவருவதிலுள்ள சட்ட பிரச்சினையை தீர்த்தல் போன்றவற்றையும் சேவையை இஸ்வா அமைப்பு இலவசமாக செய்து வருகின்றனர்.

    இச்சேவைகள் மக்கள் பண அறவீடு இன்றி (வாகன பராமரிப்பு. றைவர் சம்பளம் ) என்பன இஸ்வா அமைப்பின் உறுப்பினர்களின் உடலுழைப்பால் இலவசமாக செய்யப்படுகிறது. இது வரை வாகன சாரதிகள் சம்பளமின்றி தியாக உணர்வுடன் செயற்படுகின்றனர். சம்பளம் வளங்கப்படின் பதினைந்து இலட்சம் ரூபாய் (வாகன சாரதி சம்பளம்) செலவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவை சேமிக்கப்பட்டுள்ளது.
    (குறிப்பு - இத்தகவல்கள் தனிநபர் விசாரிப்பு. ஜும்மா பள்ளிவாசல் உறுப்பினர்களின் வாக்கு மூலம். இஸ்வா அமைப்பின் துண்டுப்பிரசுரம். றுநடிளவைந யிலிருந்து பெறப்பட்டவையாகும்)

    இவைகளை சாரம்சமாக மக்கள் மன்றத்தில் நான் முன் வைக்கிறேன்,
    01. இதுவரை எந்த ரைவரும் சம்பளத்திற்க்கு நியமிக்கப்படவில்லை. மக்கள் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. வீண்வீரயம் செய்யப்படவில்லை.
    02. ஜனாஸா வாகன சேவையில் எந்த குறையும் முன்வைக்கப்படவில்லை.
    03. வாகனம் மக்கள் பொது சொத்து.
    04. ஜும்மா பள்ளிவாசலின் பூரண ஒத்துழைப்பும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
    05. வரவு செலவு கணக்கறிக்கை ஜும்மா பள்ளிவாசலுக்கு வருடாந்தம் அனுப்பப்படல்.
    தொடரும்.....
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாஸாவும் - பொய் பித்தலாட்டமும் - பாகம் - 01 Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top