• Latest News

    August 29, 2018

    இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு


    இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பதவி நிலையில் உள்ள ஐந்து பேருக்கும் லெப்டினென் கேர்னல் பதவி நிலையில் உள்ள 25 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைப் படி இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து கூறினார். 

    அதன்படி பிரிகேடியர் பதவியில் உள்ள ஐவர் மேஜர் ஜெனரல் தரத்திற்கும், லெப்டினென் கேர்னல் 25 பேர் கேர்னல் தரத்திற்கும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 

    மேஜர் ஜெனராலாக பதவி உயர்த்தப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர் செயற்பாட்டின் போது அங்கவீன நிலை ஏற்பட்ட நான்கு பேர் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top