எஸ்.றிபான் -
மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் 139 வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது. இச்சசட்டத்திற்கு ஆதரவாக யாரும் வாக்களிக்கவில்லை. இவ்வறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த உள்ளுராட்சி, மாகாண சபைகள், விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா கூட ஆதரவாக வாக்களிக்கவில்லை. அமைச்சர் ஒருவர் தான் முன் வைத்த ஒரு விடயத்திற்கு எதிராக வாக்களித்தமை இதுவே முதற் தடவையாகும். அத்தோடு இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு வாக்குத்தானும் பெற்றுக் கொள்ளாததொரு அறிக்கையாகவும் இதுவுள்ளது. மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி கண்டுள்ளமையால் மாகாண சபைக்கான தேர்தல் இன்னும் காலதாமதம் ஆகலாமென்று தெரிகின்றது.

இதே
வேளை, இந்த அறிக்கை தோல்வி கண்டுள்ளமையால் எல்லாம் சரியாகி விட்டதென்று
கருத முடியாது. இதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை விகிதாசார முறைப்படி
உடனடியாக நடத்தலாமென்று கூற முடியாது. கலப்பு தேர்தல் முறையில் மாகாண சபைத்
தேர்தலை நடத்துவதற்கு வகுக்கப்பட்ட எல்லைகள் பற்றிய அறிக்கையே தோல்வி
கண்டுள்ளது. ஆனால், மாகாண சபைத் தேர்தலை கலப்பு முறையில்தான் நடத்த
வேண்டுமென்ற சட்ட மூலம் இன்னும் அமுலில் உள்ளது. விகிசாதார தேர்தலின்
அடிப்படையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் ஏற்கனவே
நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மூலத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இதே வேளை,
எல்லை நிர்ணய அறிக்கை தோல்சி அடைந்த கையுடன் இலங்கையின் அரசியலில் புதிய
சிக்கல்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
மாகாண சபைத் தேர்தல்
விகிதசார முறையில் தேர்தலை நடத்துவதனால் பண வீண்விரயம் செய்யப்படுகின்றது. விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு கட்சியின் வேட்பாளர்களிடையே போட்டிகளும், சண்டைகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்தோடு தெரிவு செய்யப்படும் பிரதிநிதி பொறுப்புக் கூறல் இல்லாததொரு முறையாகவும் விகிதாசாரத் தேர்தல் உள்ளமையால் இதனை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு பதிலாக கலப்பு தேர்தல் முறையைக் கொண்டு வர வேண்டுமென்று பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளினாலும் தெரிவிக்கப்பட்டன.
இதற்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்காக தினேஸ் குணவர்த்தன தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இதே வேளை 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமும் கலப்பு தேர்தல் முறையை கொண்டு வர வேண்டுமென்று தெரிவித்தது.

கலப்பு
தேர்தல் முறை சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கச்
செய்யுமென்று தெரிவிக்கப்பட்டன. இதனை சிறுபான்மைக் கட்சிகளோ,
பெரும்பான்மைக் கட்சிகளோ காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடந்த 2017.09.20ஆம்
திகதி பாராளுமன்றத்தில் மாகாண சபைத் தேர்தல் முறையில் மாற்றத்தை
ஏற்படுத்தி கலப்பு தேர்தல் முறையை அறிமுகம் செய்வதற்குரிய சட்ட மூலம்
பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 43
வாக்களும் அளிக்கப்பட்டன. இதன் பிரகாரம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்
மாகாண சபைத் தேர்தல் சட்ட மூலம் நிறைவேறியது. இச்சட்ட மூலத்தை கூட்டு
எதிரணியினர் எதிர்த்தனர். பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டு குழப்பம்
விளைவித்தனர். இதனால் அன்றைய தினம் சபை 15 நிமிடங்களுக்கு ஒத்தி
வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சட்ட
மூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் மிகவும் தீவிரமாக தமது எதிர்ப்பைக் காட்டியது. ஆயினும், இறுதி
நேரத்தில் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் தலையீட்டால் முஸ்லிம்
காங்கிரஸோடு இணைந்து மக்கள் காங்கிரஸும் ஆதரவு அளித்தது.
இவ்வாறு
சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேர்தல்
தொகுதிகளை நிர்ணயம் செய்ய வேண்டி ஏற்பட்டது. அதற்காக ஒரு குழுவும்
அமைக்கப்பட்டது. இக்குழுவினால் தயாரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையில் பல
குறைபாடுகள் உள்ளன. இதனை பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளும் ஏற்றுக்
கொண்டன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால் பிரதமர் தலைமையில் குழுவொன்று அமைக்க வேண்டுமென்ற தீர்மானத்திற்கு அமைவாக சபாநாயகர் 2017இன் 17ஆம் இலக்க மாகாண சபை திருத்தச் சட்டத்தின் 4(12) மூலத்திற்கு ஏற்ப எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்றை சபாநாயகர் நியமித்துள்ளார். இக்குழு இரண்டு மாதங்களுக்குள் தமது மீளாய்வு அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்க வேண்டும். அப்போதுதான் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும்.

பாராளுமன்றத்தில்
எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி கண்டுள்ளதேயன்றி மாகாண சபைத் தேர்தலை கலப்பு
முறையில் நடத்த வேண்டுமென்ற சட்ட மூலம் அமுலில் உள்ளது. மாகாண சபைத்
தேர்தலை பழைய விகிதாசார அடிப்படையில் நடத்த வேண்டுமாயின் மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் கலப்பு தேர்தல் முறையை இரத்துச் செய்யும் சட்ட மூலம்
நிறைவேற்றப்பட வேண்டும். எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகளே
அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய தேர்தல் முறையை இரத்துச்
செய்வதற்குரிய மூன்றில் இரண்டு (150 வாக்குகள்) பெரும்பான்மை கிடைக்குமா
என்ற சந்தேகம் எழுகின்றது. இந்த சிக்கலுக்கு விடை காணாது எல்லை நிர்ணய
அறிக்கையை தோல்வியடைச் செய்து விட்டோமென்று கூறிக் கொள்வதில் அர்த்தமில்லை.
மூன்றில் இரண்டு தேவை
மாகாண சபைத் தேர்தல் சட்ட மூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட போது அது அரசியல் யாப்புக்கு எதிரானதென்று நீதிமன்றம் தெரிவித்தது. இதனால், குறிப்பிட்ட சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டது. குறிப்பிட்ட சட்ட மூலம் தமிழ், முஸ்லிம்களுக்கு பாதக நிலையை ஏற்படுத்தும் என்று தெளிவுபடுத்திய போதிலும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளித்தன.

மூன்றில்
இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்தை இரத்துச் செய்வதாக
இருந்தால் அதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று
தெரிவிக்கப்படுகின்றன. இதே வேளை, அரசியல் யாப்புக்கு முரணான ஒரு
விடயத்திற்கே மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இச்சட்ட மூலத்திற்கு
மூன்றில் இரண்டு தேவையில்லை. சாதாரண பெரும்பான்மையுடன் சட்ட மூலத்தை
இல்லாமல் செய்ய முடியும். இதன் மூலமாக அரசியல் யாப்பில் உள்ள முரண்பாடு
நீங்குகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
இதே
வேளை, அரசியல் யாப்புக்கு முரணாகக் காணப்பட்ட கலப்பு தேர்தல் முறை
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறும் போது அது அரசியல்
யாப்புக்குரிய ஒன்றாகிவிடுகின்றது. ஆதலால், இதனை சாதாரண பெரும்பான்மையுடன்
நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
சாணக்கியத்தின் வெற்றி
இவ்வாறு மாகாண சபைத் தேர்தலில் பிரச்சினைகள் உள்ள நிலையில் எல்லை நிர்ணய அறிக்கை எங்களின் சாணக்கியத்தினால்தான் தோல்வியடைச் செய்யப்பட்டுள்ளதென்று அரசியல் இலாபம் தேடிக் கொள்ளும் பிரச்சாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக முன்னால் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர் அணியினரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு ரவூப் ஹக்கீமே காரணமாகும் என்று அதீத பிரச்சாரங்கள் சமூக இணையதளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாகாண சபைத் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 2017.09.20ஆம் திகதி கொண்டு வரப்பட்ட போது மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர் அணியினர் கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள். அந்த அணியினர் எல்லை நிர்ணய அறிக்கைக்கும் எதிராகவே வாக்களிப்பார்கள் என்பதில் ஐயம் காண முடியாது. காகம் உட்கார பனம்பழம் விழுந்துள்ளது. அதற்காக காகம் என்னுடைய பாரத்தினால்தான் பனம்பழம் விழுந்துள்ளதென்று கூற முடியாது.

மேலும்,
மாகாண சபைத் தேர்தல் சட்ட மூலம், எல்லை நிர்ணயம் ஆகியவற்றில் முஸ்லிம்
காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் சமூகம் சார்ந்த தமது கடமைகளைச் சரியாகச்
செய்யவில்லை. அரசாங்கத்தின் நகர்வுகளை ஒரு எல்லைக்கு அப்பால் எதிர்க்கும்
சக்தி முஸ்லிம் கட்சிகளுக்கு கிடையாது என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள
வேண்டும்.
முறைப்பாடு
மாகாண சபைத் தேர்தல் முறைமை, எல்லை நிர்ணய அறிக்கை ஆகியவை காரணமாக அரசாங்கத்தின் பணம் வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் தலைவர் கனகரத்னம் தவலிங்கம் ஆகியோர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக் குழுவிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. சுமார் 212 இலட்சம் செலவீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலக வேண்டும்
இதே வேளை அமைச்சர் பைஸர் முஸ்தபா தவறுகள் உள்ள அறிக்கையை சமர்ப்பித்தது மட்டுமல்லாது அச்சட்ட மூலத்திற்கு தானும் எதிர்த்து வாக்களித்துள்ளார். இதனால் அவர் தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று கூட்டு எதிர் அணியினர் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

என்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் பல குழறுபடிகள் உள்ளன. அதனை
ஏற்றுக் கொள்கின்றேன். என்னை அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு
சொல்லுகின்றார்கள். அந்த அறிக்கையை நான் தயாரிக்கவில்லை. எல்லை நிர்ணய
ஆணைக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையே நான் முன் வைத்துள்ளேன். அது
என்னுடைய அறிக்கையில்லை என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பொறுப்பு வாய்ந்த அமைச்சர் தான் முன் வைக்கும் அறிக்கையில் தவறுகளும், முரண்பாடுகளும் உள்ளன என்று தெரிந்து கொண்டே அதனை பாராளுமன்றத்தில் முன் வைத்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எல்லை நிர்ணய அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம்களுக்கு பாதக நிலை காணப்படுகின்றதென்று சுட்டிக்காட்டிய போது அவர்களின் இக்கருத்திற்கு எதிராக மிகக் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.

எல்லை
நிர்ணய அறிக்கை தோல்வி அடையும் என்று முன் கூட்டியே அறிந்து கொண்டமையும்,
சிறுபான்மையினக் கட்சிகள் ஓர் அணியில் நின்று எதிர்க்கின்றமையாலுமே பைஸர்
முஸ்தபா தான் சமர்ப்பித்த அறிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளார். அதாவது
நாங்களும் சிறுபான்மையினரின் உணர்வுகளை மதிக்கின்றோம் என்று
காட்டுவதற்காகவே அவர் எதிர்த்து வாக்களித்துள்ளார். எதிர்த்து
வாக்களிக்கும் முடிவினைக் கூட அவர் தனித்து எடுத்திருக்கமாட்டார்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரமே செய்திருப்பார். மேலும், தற்போது
பெரம்பான்மையினக் கட்சிகள் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற்றுக்
கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆதலால், எல்லை
நிர்ணய அறிக்கை ஊடாக பெரும்பான்மைக் கட்சிகளும், சிறுபான்மைக் கட்சிகளும்
அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.
அரசியல் இலாபம்
எல்லை நிர்ணய அறிக்கையை முஸ்லிம் கட்சிகள் சமூகம் சார்ந்ததாகக் காட்டிக் கொண்டாலும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்களில் அரசியல் இலாபம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. மாகாண சபைத் தேர்தலில் எந்த மாற்றம் செய்யப்பட்டாலும் அது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்வதற்காக செய்யப்படும் மாற்றம் என்று சிறுபான்மையினர் கருதிக் கொள்ளக் கூடாது. சிறுபான்மையினருக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு பெரும்பான்மைக் கட்சிகள் விரும்புவதில்லை. சிறுபான்மையினருக்கு அதிகாரங்களை வழங்கி பெரும்பான்மை மக்களிடையே தமது செல்வாக்கை இழந்து விடக் கூடாதென்பதில் பெரும்பான்மைக் கட்சிகள் உறுதியாக உள்ளன. ஆதலால், மாகாண சபையின் நொண்டிக் காலையும் உடைப்பதற்கும், சிறுபான்மையினரை தங்களில் தங்கியிருப்பதற்காகவுமே மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அத்தகையதொரு நடவடிக்கையே மாகாண சபை தேர்தல் முறை மாற்றமும், எல்லை நிர்ணயமுமாகும். ஏற்கனவே மாகாண சபைத் தேர்தல் முறைக்கு வாக்களித்த முஸ்லிம் கட்சிகள் தங்களின் எஜமான்களாகிய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களை திருப்திப்படுத்தினார்கள். எல்லை நிர்ணய அறிக்கையை ஏற்றுக் கொண்டால் தங்களில் அரசியல் முற்றாக மூழ்கிவிடும் என்பதற்காகவே முஸ்லிம் கட்சிகள் எதிர்க்கின்றன.

வேளை, சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் கைககளில் உள்ள கறைகள்
காரணமாக அரசாங்கத்தின் அனைத்து சட்ட மூலங்களையும் கண்களை மூடிக் கொண்டு
ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆதரவு அளித்ததன் பின்னர் அரசாங்கம்
எங்களை ஏமாற்றி விட்டதென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மொத்தத்தில் பெரும்பான்மைக் கட்சிகளும், சிறுபான்மைக் கட்சிகளும் தங்களின்
அரசியல் இலாபத்திற்காகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாறாக அவற்றின்
நடவடிக்கைகளில் நாட்டுப்பற்றோ, சமூகப்பற்றோ, இன ஐக்கிய உணர்வோ கிடையாது.
இதே
வேளை, மாகாண சபைகளுக்குரிய தேர்தல் 50வீதம் தொகுதிவாரியாகவும், 50வீதம்
விகிதாசாரப் படியும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வகையில்
நடக்குமாயின் பாராளுமன்ற தேர்தலும் கலப்பு முறையில் நடப்பதற்கு
வாய்ப்புக்கள் உள்ளன. பாராளுமன்ற தேர்தல் கலப்பு தேர்தல் முறையில்
நடக்குமாயின் தமிழ், முஸ்லிம், சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு
தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிகள் கிடைக்காது போய்விடும். இதனால்தான்
தாம் ஆதரவு அளித்த தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக்
கூடாதென்றும், விகிதாசார அடிப்படையிலேயே தேர்தலை நடத்த வேண்டுமென்று
கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு மாத்திரமின்றி பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் பாதகமாகவே அமைந்துள்ளன. இந்த அனுபவத்தை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் பெற்றுள்ளார்கள். நெருப்பை தொட்டுப் பார்த்து சுடுகின்றது என்று சொல்லும் நிலையிலேயே முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. உள்ளன.

வேளை, கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் மாகாண சபைகளில்
43ஆக உள்ள முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 13ஆகக் குறைந்துவிடும். 30
பிரதிநிதிகளை இழக்க வேண்டியேற்படும் என பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயம் அவ்வாறு முஸ்லிம்களுக்கு அநீயாயம்
ஏற்படும் வகையில் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்
மாகாண சபைகளுக்குரிய தேர்தல் எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் அளவில் நடக்காது
என்பதற்குரிய கருக்களே அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கை
இதே வேளை, பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்து மீண்டும் முன் வைக்கப்பட்டாலும் அதனையும் பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்க்கவே செய்வார்கள். எல்லை நிர்ணய அறிக்கையை தோல்வி அடையச் செய்துள்ளமை ஊடாக கலப்பு தேர்தல் முறையை சிறுபான்மைக் கட்சிகள் எதிர்த்துள்ளன என்பதே அதன் அர்த்தமாகும்.

வேளை, சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை பாதிக்காத வகையில் எல்லை
நிர்ணயம் செய்துள்ளோம் ஆதரவு தாருங்கள் என்று கேட்டால் சிறுபான்மைக்
கட்சிகள் என்ன செய்யும் என்று நிச்சயிக்க முடியாது.
பொதுவாக
உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கின்ற போது
கலப்பு தேர்தல் முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம்
பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஆனால்,
கட்சிகளின் தனிச் செல்வாக்கில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல
உள்ளுராட்சி சபைகளில் அதிகாரங்களை தனித்துப் பெற்றுக் கொள்வதில் அரசியல்
கட்சிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கட்சியின் தலைவர்களும்,
அமைச்சர்களும் உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக
சாதாரண ஒரு உறுப்பினரின் கோரிக்கைகள், தேவைகளை நிறைவேற்றிக்
கொடுப்பதற்கும், அவருக்கு பணிந்து செல்வதற்குமுரிய சூழலை கலப்பு தேர்தல்
ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்திற்காக ஒரு உறுப்பினருக்கு 50 இலட்சம் முதல்
வேறு தேவைகளும் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில்
தெரிவிக்கப்பட்டன. அந்தளவிற்கு மிக மோசமான நிலையை கலப்பு தேர்தல் முறை
கொண்டு வந்துள்ளது.
இவ்வாறு
விகிதாசாரத் தேர்தல் முறையை விடவும் அதிக பணச் செலவீடும், குளறுபடிகளும்,
செல்வாக்கு இழப்புக்களும், சாதாரண உறுப்பினர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள
மவுசு காரணமாக அத்தராத்திரியில் குடை பிடிக்கும் நிலைமையையும்
தோற்றுவித்துள்ள கலப்பு தேர்தல் முறையை எந்த வகையிலும் சிறுபான்மைக்
கட்சிகள் ஆதரிக்கக் கூடாது. அத்தோடு சிறுபான்மையினரின் முதுகில் பயணித்து
ஆட்சி அமைத்துக் கொண்ட நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கும்
அரசாங்கத்தின் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் சிறுபான்மையினரின் அரசியல்
இருப்புக்கு வேட்டு வைக்கும் கலப்பு தேர்தல் முறைமையை முற்றாக கைவிட
வேண்டும். விகிதாசாரத் தேர்தல் முறைமையில் உள்ள குறைபாடுகளை நீக்கி அதனை
இன்னும் சிறப்பாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்தோடு மாகாண
சபைத் தேர்தலை காலதாமதம் செய்யாது 2019 ஜனவரிக்கு முன்னதாக தேர்தலை
நடத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டும்.
Vidivelli 31.08.2018
0 comments:
Post a Comment