சஹாப்தீன் -
கல்முனை மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு எதிர்க் கட்சியினர்தான் காரணம் என்று பொய்யான தகவல்களை மேயர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். அவர் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து கொண்டிருக்கின்றார். சபையில் எடுக்கப்படும் தீhமானங்களை நடைமுறைப்படுத்தாது ஆளுங் கட்சி, எதிர்க் கட்சி என்று உறுப்பினர்களை மோதவிடுகின்றார்.
இவ்வாறு கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் எம்.முபீத் கல்முனை எஸ்.எல்.ஆர் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்; தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் எதிர்த் தரப்பு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
வாகனங்களை திருத்துவதற்கு உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்ய வேண்டுமென்று சபையில் மேயரினால் பிரேரணை ஒன்று முன் வைக்கப்பட்டது. அப்போது எதிர்த் தரப்பினராகிய நாங்கள் திருத்த வேண்டிய வாகனங்களின் விபரங்கள் தாருங்கள் என்று மேயரிடம் கேட்டோம். ஆதற்கு அவர் அவ்வாறு தர முடியாதென்று கூறினார். அது மட்டுமல்லாது ஆளுந் தரப்பிலுள்ள இரண்டு உறுப்பினர்களை அவராகவே எழும்பச் செய்து அத்தீர்மானத்தை பிரேரித்து, ஆமோமிக்கச் செய்தார். இந்நிலையில் இத்தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுங்கள் என்று கேட்டோம் அதனையும் மேயர் எற்றுக் கொள்ளவில்லை.
இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும் மேயர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சுயேட்சைக் குழுக்கள் ஆகிய இணைந்து சபையை குழப்பிக் கொண்டிருப்பதாக பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார். குழப்பங்களுக்கு அவரே காரணமாகும்.
கல்முனை மாநகர சபையில் 10 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளார்கள். மேயர் இக்கட்சிகளின் உறுப்பினர்களை அதிகாரத்தைக் கொண்டு அடக்கியாள நினைக்கின்றார். அவர் அதிகார துஸ்பிரயோகத்தை கைவிட்டு, பூச்சாண்டித்தனத்தை விலக்கி மக்களின் நலனுக்கு செயற்பட முன் வர வேண்டும்.
கல்முனை மாநகர சபையில் 104 அமையசார் ஊழியர்கள் உள்ளார்கள். இவர்களுக்கு மாதாந்தம் ரூபா 22 இலட்சம் சம்பளம் வழங்கப்படுகின்றது. அவர்களைக் கொண்டு மக்களுக்கு நல்ல சேவைகளைச் செய்ய வேண்டும். கல்முனை மாநகர சபைக்குரிய ரூபா 03 கோடி 40 இலட்சம் நிதி வங்கி ஒன்றில் நிலையான வைப்பில் கடந்த காலங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிதியில் ஒரு தொகையை எடுத்து திண்மக் கழிவு அகற்றுவதற்கு 04 வாகனங்களை கொள்வனவு செய்வோம் என்று தெரிவித்துள்ளோம். ஆதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதே வேளை, திண்மக் கழிவகற்றல் பணி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன.
சபை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்களின் கௌரவத்திற்கு பாதக நிலை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் அமைய வேண்டுமென்று கேட்டு வருகின்றோம். நாங்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்பட தயாராக இருக்கின்றோம். ஆனால், மேயர் விட்டுக் கொடுப்பு, பொறுமை ஆகியன இல்லாது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

0 comments:
Post a Comment