ஐ.தே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைப்பெறவுள்ளது.
இக்கூட்டம் இன்று மாலை 6.00 மணியளவில் அலரிமாளிகையில் ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் ரணிலிற்கு 117 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு
இருப்பதாக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் அவதானம்
செலுத்தப்படவுள்ளது.
மேலும் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்
மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக
கலந்துரையாடப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment