அமைச்சரவையின்
எண்ணிக்கையை 30ஆக மட்டுப்படுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தீர்மானித்தால், தானும் ரிஷாட் பதியூதினும் எவ்வித அமைச்சுப் பதவிகளையும்
பெறமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஆளுங்கட்சியினரின் கூட்டத்தில் இது
தொடர்பான தமது அபிப்ராயங்களை தானும், ரிஷாட்டும் தெரிவித்ததாகவும் மனோ
கணேசன் பதிவிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment