நிறைவேற்று அதிகாரத்தின் மூலமாக சர்வதிகார ஆட்சி செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெட்கிக் குனிந்து தலை குனிய நேரிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் பிரதமருமில்லை, அமைச்ரவையுமில்லை, அதனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியே ஆட்சி அமைக்க வேண்டும். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பமின்றி இருக்கின்றார். இதற்கு தடையாக இருக்கின்ற ஜனாதிபதி பதவி விலக வேண்டும். இல்லையாயின் எங்களிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும். எனவும் அவர் அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அமைச்சின் செயலாளர்களை அழைத்து பேசவோ, அவர்களுக்கு ஆணையிடுவதற்கோ ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை..
நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டுமென்று அழுத்தம் கொடுத்தால் தான் பதவி விலக வேண்டியேற்படுமென்று ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்.
அது அவரின் விருப்பம். பதவி விலக வேண்டுமென்றால் அவர் உடனடியாக விலக வேண்டும்.
அவரின் சர்வதிகார ஆட்சியால் நாடு மோசமடைந்துள்ளது. இந்நிலையில் அரசை எப்படி முன்னெடுப்பதென்று எங்களுக்கு தெரியும்.

0 comments:
Post a Comment