ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ள
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய அமைச்சுப் பதவிகளை தம் வசமே
வைத்துக்கொள்வேன் இன்று ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம்
தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
நாளை காலை பிரதம அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், புதிய அரசாங்கத்தில் பல முக்கிய அமைச்சுகளை தம்வசமே
வைத்திருப்பேன் என்று ஜனாதிபதி மீண்டும் அதிரடியை காட்ட ஆரம்பித்துள்ளார்.
குறிப்பாக சட்டம்,ஒழுங்கு, நிதி, பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி,ஊடக
அமைச்சுகளை தம்வசமே வைத்திருப்பேன் என்று ரணில் விக்கிரமவிங்கவிடம் அவர்
கூறியுள்ளதாகவும் அதற்கு ரணில் விக்கிரமசிங்க கடும் எதிர்ப்பை
வெளியிட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இல்லாவிட்டால் சு.கவின் சிலரை
இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை கொண்டுசெல்வது
தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், சு.கவின் சிலர் அரசில் இணைக்கப்பட்டாலும், ஐ.தே.க.
விரும்பும் அமைச்சுகளை அவர்களுக்கு வழங்க வேண்டுமென கட்சியினுள் ரணிலுக்கு
அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment