
இவரின் மாளிகைக்காடு இல்லத்தில்
ஊடகவியலாளர்களை நேற்று சனிக்கிழமை காலை சந்தித்து இது தொடர்பாக கருத்து
கூறியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:
காரைதீவு
பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் மொத்தத்தில்
குப்பையாகவே காணப்படுகின்றது. ஆகவேதான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இதை
எதிர்க்கவும், நிராகரிக்கவும் நேர்ந்தது. மற்றப்படி தமிழ் தேசிய
கூட்டமைப்பின் வரவு - செலவு திட்டம் என்பதற்காக எதிர்ப்பை காட்டி
இருக்கவில்லை.
கடந்த 10 ஆம் திகதி மாதாந்த
கூட்டத்துக்கு சபை உறுப்பினர்கள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலால்
அழைக்கப்பட்டு இருந்தோம். அழைப்பிதழில் மாதாந்த நிகழ்ச்சி நிரல்தான்
தரப்பட்டு இருந்தது. வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவது குறித்து
நிகழ்ச்சி நிரலில் இருக்கவே இல்லை.
இதற்கு
முன்னதாக உத்தேச வரவு - செலவு திட்டத்தை மதிப்பிட்டு பரிசீலிப்பதற்காக
கடந்த 06 திகதி உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு இருந்தோம். அங்கு நாம்
மேலோட்டமாக பார்வையிட்டபோது எரிபொருள் செலவுக்கு 450,000 ரூபாய்
குறிப்பிடப்பட்டு இருப்பதை கண்ணுற்றோம். இதை 300,000 ரூபாயாக குறைப்பது
என்று அனைவரும் ஒத்து கொண்டு இணங்கினோம்.
ஆனால்
மாதாந்த கூட்டத்துக்கு பிரதேச சபையின் கூட்ட மண்டபத்துக்கு ஏணி படியால்
நாம் சென்று கொண்டிருந்தபோதுதான் வரவு செலவு திட்டத்தின் இறுதி வடிவம்
எம்மிடம் சிற்றூழியர் மூலமாக கையளிக்கப்பட்டது. இதில் நாம் இணக்கம்
கண்டிருந்தபடி எரிபொருளுக்கான செலவு குறைக்கப்பட்டு இருக்கவில்லை. மேலும்
2018 ஆம் ஆண்டு எரிபொருளுக்காக சுமார் 184,000 ரூபாய் செலவானதாக
காட்டப்பட்டு இருந்தது. ஆனால் 150,000 ரூபாய்தான் எரிபொருளுக்கு செலவாகும்
என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இதன்படி பார்த்தால் சபையின் அனுமதி
பெறமால் தவிசாளர் கூடுதல் செலவை மேற்கொண்டு உள்ளார்.
இதே
நேரத்தில் உறுப்பினர்களுக்கு தரப்பட்டு வந்திருக்கின்ற மாதாந்த
அறிக்கைகளின்படி வரவு - செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த
எரிபொருள் செலவை காட்டிலும் பல மடங்கு கூடுதல் செலவு இடம்பெற்று உள்ளது.
இதன்படி பார்க்க போனால் மாதாந்த அறிக்கைகள் சரி என்றால் வரவு - செலவு
திட்டம் பிழையானது ஆகும். வரவு - செலவு திட்டம் சரியானது என்றால் மாதாந்த
அறிக்கைகள் பிழையானவை ஆகும்.
மைதான திருத்த செலவு, ஓய்வூதிய
கொடுப்பனவு செலவு ஆகியன உத்தேச வரவு - செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டு
இருந்தபோதிலும் வரவு - செலவு திட்டத்தின் இறுதி வடிவத்தில் மறைத்து
ஒளிக்கப்பட்டு விட்டன.
2018 ஆம் ஆண்டில்
முத்திரை தீர்வை மூலம் 310,000 ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்டு
இருந்தது. வரவு - செலவு திட்டத்தில் வருமான மிகுதியாக 2,000 ரூபாய்
குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் புதிய ஆண்டில் முத்திரை தீர்வை மூலம்
470,000 ரூபாய் வருமானத்தை எதிர்பார்ப்பதாக வரவு - செலவு திட்டத்தில்
குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இதில் 100,000 ரூபாய் வருமானம்
குறைந்தால்கூட சபை நஷ்டத்தில் இயங்கும். இந்த நஷ்டத்துக்கு யார்
பொறுப்பேற்பது? எங்கிருந்து இந்த நஷ்டத்தை ஈடு செய்வது?
இந்த
வரவு - செலவு திட்டத்தில் நலன்புரி சேவைகளுக்கான ஒதுக்கீடு மிக
சொற்பமானதாக காணப்படுகின்றது. தவிசாளரின் தேவைகளுக்கான எதிர்பார்ப்பு
தொகைகள் அதிகரிக்கப்பட்டு நலன்புரி விடயங்களுக்கான தொகை பெரிதும்
குறைக்கப்பட்டு உள்ளது கல்வி, நூலக சேவைக்கு 100,000 ரூபாயும், நூலக
நன்கொடைக்கு 50,000 ரூபாயும், டெங்கு ஒழிப்புக்கு 150,000 ரூபாயும்,
விளையாட்டு ஊக்குவிப்புக்கு 50,000 ரூபாயும் மாத்திரமே மொத்தமாக
ஒதுக்கப்பட்டு உள்ளன. மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் மக்களின் முகத்தில்
எப்படி முழிக்க முடியும்?
உறுப்பினர் காண்டிபன் மீது நடவடிக்கை
ஆகவேதான்
அற்பத்தனமான இந்த வரவு - செலவு திட்டத்தை நிராகரிக்க ஸ்ரீலங்கா சுதந்திர
கட்சி தீர்மானித்தது. அதன்படி நான் வரவு - செலவு திட்டத்தை எதிர்த்து
வாக்களித்தேன். இதே நேரம் காரைதீவு சுயேச்சை குழு உறுப்பினர்களான
பூபாலரட்ணம், மோகன் ஆகியோரும் எதிர்த்து வாக்களித்தனர். தமிழ் தேசிய
கூட்டமைப்பை சேர்ந்த சபாபதி நேசராசா வாக்களிக்காமல் நடுநிலை வகித்தார்.
ஆனால்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை மீறியவராக எமது உறுப்பினர் மு.
காண்டிபன் வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து திருத்த முடியாத
தவறை செய்து உள்ளார். இவருக்கு வரவு - செலவு திட்டத்தின் குறைபாடுகள்,
ஒழுங்கீனங்கள், முறைகேடுகள் ஆகியன கடைசி நேரம் வரையில் என்னாலும், எமது
தொகுதி அமைப்பாளர், எமது பிரதேச அமைப்பாளர் ஆகியோராலும் எடுத்து
சொல்லப்பட்டன. வரவு - செலவு திட்டத்தை எதிர்த்தே வாக்களிக்க வேண்டும் என்று
கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டு இருந்தபோதிலும் அவர் ஆதரித்தே
வாக்களித்தார். நான் இது தொடர்பாக எமது கட்சியின் பொது செயலாளருக்கு
எழுத்துமூல முறைப்பாடு மேற்கொண்டு இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று கேட்டு உள்ளேன்.
0 comments:
Post a Comment