• Latest News

    January 29, 2019

    சாய்ந்தமருது Bவிளாஸ்டரின் அங்கி அறிமுக நிகழ்வு

    எம்.வை.அமீர்-
    சாய்ந்தமருதில் முன்னணி விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான Bவிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் அங்கி அறிமுக நிகழ்வும் ஒன்றுகூடலும் 2019-01-27 ஆம் திகதி சாய்ந்தமருது சீ விறீஸ் உணவக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
    Bவிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ. எல்.முகம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலய பிரதி அதிபரும் விளையாட்டுக் கழகத்தின்  2019 ஆண்டுக்கான அங்கி அனுசரணையாளருமான ஏ.எம்.ஏ.நிசார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
    நிகழ்வின் விசேட அதிதிகளாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் முஹர்றம் பஸ்மிர், தொழிலதிபர்களான எம்.எச்.நாசர், ஏ.எம்.றியாத்,ஏ.ஜௌபர் ஆகியோரும் சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் எம். ஜௌபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
    விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ஏ.சி.எம்.நிசார் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கழக அங்கத்தினருக்கு அங்கத்துவ அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது Bவிளாஸ்டரின் அங்கி அறிமுக நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top