சஹாப்தீன் -
அம்பாரை, அநுராதபுரம், குருநாகல், மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் சோளப் பயிர்ச் செய்கையை அந்நிய படைப்புழு மிகவும் மோசமாகத் தாக்கி அழித்துள்ளன. இதனால், சோளப் பயிர்ச் செய்கையாளர்கள் பெரும் நஸ்டத்தை அடைந்துள்ளார்கள்.
குறிப்பிட்ட இப்புழு நெல், இறுங்கு, கரும்பு, மரக்கறிகள், பழங்கள் ஆகியவற்றையும் தாக்கும் சாத்தியங்கள் உள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், விவசாயிகள், மாணவர்கள், பொது மக்கள் ஆகியோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று நிந்தவுர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தினால் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப், அதிபர் எஸ்.எம்.ஜாபீர் மற்றும் கிராம சேவக உத்தியோர்களும், விவசாயப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
0 comments:
Post a Comment