(அகமட் எஸ். முகைடீன்)
சம்மாந்துறை பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசுடனான கலந்துரையாடல் நேற்று (26) சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் அவரது சம்மாந்துறை இல்லத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் நீர்ப்பாசண பொறியியலாளர் எம். நவாஸ், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ. மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் நௌசாத், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கள்ளியம்பட்டை மற்றும் வம்மியடி பாலங்கள் உள்ளிட்ட திராய்மடுவிலுள்ள இரண்டு பாலங்களையும் புனரமைத்து தருவதோடு விவசாய பாதைகளை அமைத்து தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்தார். நெற் பயிர்ச்செய்கை மற்றும் நெல் அறுவடைக் காலங்களில் விவசாயிகள் இப்பாலங்கள் மற்றும் பாதைகளை பயன்படுத்துவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கிராமிய பாலங்களை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்தி இப்பாலங்களை அமைத்துத் தரமுடியுமென இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதன்போது உறுதியளித்தார். மேலும் ஜப்பான் நாட்டின் ஜெய்கா திட்டத்தின் மூலம் விவசாய பாதைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வததாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment