• Latest News

    January 29, 2019

    போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் - கிழக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதி

    இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அவர்களின் நேரடி கண்காணிப்பிலும், வழிகாட்டலிலும் , கல்வி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்வி திணைக்களமும்  இணைந்து போதை ஒழிப்பு  தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை, இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி, அம்பாறை ஹிங்குரான மகா வித்தியாலயம் மூன்று பாடசாலைகளில் இடம்பெற்றது.

    ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள்  இந்த வாரம் போதை ஒழிப்பு வாரமாக பிரகடனத்தப்பட்டதையடுத்து இந்த நிகழ்வுகள் ஜனாதிபதி கண்காணிப்பில் இடம் பெறுகிறது.

    குறிப்பிட்ட இந் நிகழ்வுகள் மூன்று பாடசாலைகளில் இடம் பெற்றது இந் நிகழ்வில் கிழக்கு ஆளுனர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள் . இவர்களோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் நஸீர் ,மற்றும் மன்சூர் ,ஸ்ரீயானி பண்டார  அவர்களோடு கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

    போதை ஒழிப்பு தொடர்பான மாணவ நிகழ்வு இடம்பெற்றதுடன் மூன்று பாடசாலைகளுக்கும் ஆளுனர் நிதி ஒதுக்கீட்டில் தளபாடமும் , போட்டோ கொப்பி இயந்திரமும் வழங்கப்பட்டதும் குறிப்பிதக்கது.
    ALM RIFAS






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் - கிழக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top