நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் எனக்கு எவ்வித முன்னெச்சரிக்கைகளும் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. ஆனால் உயர்மட்ட அரசியல்வாதிகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக என்னுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அதனையே எனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்து முன்னரேயே தாம் அறிந்திருக்கவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
அவ்வாறெனின் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறும் வாய்ப்புள்ளது என்று தமக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமைச்சர்களான மனோகணேசன் மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மனோகணேசன் கூறினார்.
0 comments:
Post a Comment