இந்திய அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தியா இலங்கையை எச்சரிக்கை செய்திருந்தது என சிஎன்என் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரே முக்கிய புலனாய்வு தகவல்களை இந்தியா வழங்கியிருந்ததை இலங்கை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை இந்திய அதிகாரிகளினால கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே இலங்கையை எச்சரித்தோம் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்
குறிப்பிட்ட சந்தேகநபரை விசாரணை செய்தவேளை கிடைத்த தகவல்களையே நாங்கள் வழங்கினோம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் தான் இலங்கையில் பயிற்சியளித்த நபரின் பெயர் விபரங்களை வெளியிட்டார் என இந்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த ஒருவரை விசாரணை செய்துகொண்டிருந்தோம் அவ்வேளை அந்த சந்தேகநபர் சஹ்ரான் ஹாசிம் என்ற நபரின் பெயரை வெளியிட்டார் என குறிப்பிட்டுள்ள இந்திய அதிகாரி இவர் தவுஹீத் ஜமாத் அமைப்பை தற்கொலை தாரி எனவும் குறிப்பிட்டுள்ளார்
சந்தேகநபர் சஹரான் ஹாசிமை தீவிரவாதமயப்படுத்துவதற்கு தான் உதவினார் என எங்கள் பிடியிலிருந்த சந்தேகநபர் தெரிவித்தார் எனவும் இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்
எனினும் ஐஎஸ் சந்தேகநபர் எப்போது கைதுசெய்யப்பட்டார் என்பது குறித்து இந்திய அதிகாரி எதனையும் தெரிவிக்கவில்லை என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

0 comments:
Post a Comment