போதைப்பொருள் வியாபாரத்திற்கு கேந்திர மத்திய நிலையமாக தோற்றம் பெற்ற இலங்கை இன்று தீவிரவாத நடவடிக்கைககளும் முன்னுரிமை பெற்றுள்ளதாக தெரிவித்த பொதுபல சேனா அமைப்பினர், கடந்த 10 வருட காலமாக நாட்டின் அமைதி நிலை தற்போது நிலை மாற்றமடைந்து, தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ளது என பொதுபலசேனா அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் தேவாலயங்களை மையப்படுத்தி மிக கொடூரமான முறையில் குண்டு தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளமையானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பயங்கரவாத யுத்தத்தில் இருந்து மீண்ட நாம் முழுமையான பாதுகாப்பினை பெற தவறியுள்ளோம் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இதற்கு அரசாங்கமே முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment