• Latest News

    May 13, 2019

    முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நீடிக்கின்றன.


    இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் உருவாகி இப்பொழுது நாடு முழுவதும் வன்முறைகள் மோதல்கள் பரவிவருகிறன , நீர்கொழும்பு ,சிலாபம் ,குளியாபிட்டிய என்று தொடக்கி இன்று ஹெட்டிபொல என்ற இடத்தில தொடர்கிறது. பதற்றம் நிலவும் இடங்களில் ஊரடங்கு அமுல்படுத்தியும் , சமூகவலைத்தளங்களை இடைநிறுத்தியும் அரசாங்கம் வன்முறைகளை கட்டுப்படுத்த முனைந்தும் அங்கங்கே வன்முறைகள் நீடிக்கிறன.


    தற்போது ஹெட்டிபொல , அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கு அந்தப் பகுதியில் இருந்து தகவல்கள் கிடைத்திருப்பதாக கொழும்பு ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன.
    அதேபோல் கொட்டம்பிட்டிய அரபுக் கல்லூரி தீயூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

    நோன்புக் காலம் என்பதால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்









    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நீடிக்கின்றன. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top