• Latest News

    May 13, 2019

    ஜிந்துப்பிட்டிய ஸ்ரீ சமயவர்தன விகாரையின் விகாராதிபதி கொடகாவல சாந்த ஸ்ரீ தேரர் தலைமையில் இப்தார்

    ஜிந்துப்பிட்டிய ஸ்ரீ சமயவர்தன விகாரையின் விகாராதிபதி கொடகாவல சாந்த ஸ்ரீ தேரர் அவர்கள் முஸ்லிம் மக்களை அழைத்து இப்தார் விருந்து கொடுத்து முஸ்லிம்களை கௌரவப்படுத்தி சிறந்த முன்னுதாரணத்தை செய்து காட்டியுள்ளார் இதன் மூலம் நாட்டில் உள்ள பொதுமக்கள் ஜதி பேதமின்றி ஒற்றுமையாக வாழ்கிறோம் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிய தேரரின் செயல் மிகவும் பாரட்டத்தக்கது தேரர் போன்று ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்தால் இந்த நாட்டில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.


    நாட்டில் பரந்தளவில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர் அவர்கள் ஜாதி பேதமின்றி சகல இன மக்களுடனும் வாழ்ந்து வருகின்றனர் அத்தோடு மாற்று இன மக்களின் இன்பம் துன்பங்களில் கலந்துகொள்ளும் மக்களாகவே இருக்கின்றனர் இவைகளை அறியாத சில இனவாத அரசியல்வாதிகள் முஸ்லிம்களை தனிமைபடுத்த முயற்சி செய்தாலும் பொதுமக்கள் ஜாதி பேதமின்றி வாழ்கிறோம் என்பதை தேரர் அவர்கள் மிகவும் ஆணித்தரமாக எடுத்துக்காட்டியுள்ளார்
    எமது ஜனாதிபதி அவர்கள் கூறுவது போல் விரைவில் இனவாதம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் சமதான வாழ்க்கை உருவாக சகல இன மக்களும் ஒற்றுமைப்பட வேண்டும்
    முஸ்லிம்கள் மானசீகரீதியாக தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வாறான நேரத்தில்
    தேரரின் இந்த செயல் முஸ்லிம்களுக்கு பெரும் ஆறுதலாக உள்ளது அதனால் தேரரர் அவர்களுக்கு நாம் நன்றியை தெரிவிக்கின்றோம்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜிந்துப்பிட்டிய ஸ்ரீ சமயவர்தன விகாரையின் விகாராதிபதி கொடகாவல சாந்த ஸ்ரீ தேரர் தலைமையில் இப்தார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top