• Latest News

    July 29, 2019

    மீண்டும் அமைச்சர்கள்

    பதவிகளை இராஜினாமாச் செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் இன்று அமைச்சர் பதவிகளை ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனவிடம் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

    முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன், அமிர்அலி, அப்துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர்களே அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டார்கள். இவர்களே ஏற்கனவே வகித்த அமைச்சர் பதவிகளே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

    இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பைசால் காசிம்,  ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா ஆகியோர்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவில்லை.

    அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
    1. ரவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்
    2. ரிஷாத் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தக அலுவல்கள்,
    நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி அமைச்சர்
    3. அமீர் அலி செய்யத் முஹம்மத் சிஹாப்தீன்- விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்
    4. அப்துல்லாஹ் மஹ்ரூப்- துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் பிரதி அமைச்சர்






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மீண்டும் அமைச்சர்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top