ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முதல் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். றிசாட் பதியூதீன் தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தமையை அடுத்து கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி பதில் அமைச்சராக ஜனாதிபதியால் நிமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment