• Latest News

    July 29, 2019

    றிசாட் பதவியேற்றதை வெடி கொழுத்தி கொண்டாட்டம்

    றிசாட் பதியுத்தீன் மீண்டும் இன்று இரவு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் உள்ள தினச்சந்தைக்கு முன்னால் வெடி கொழுத்தி கொண்டாடினர். உதித்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து அமைச்சர் றிசாட் பதியுத்தீன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கல் வேண்டும் என அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து றிசாட் பதியுத்தீன் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.

    இந்நிலையில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிரூபிக்கப்படவில்லை. இந் நிலையில் அவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

    இதனையடுத்தே வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி, லரீப் மற்றும் அமைச்சர் றிசாடின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்த தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    கேசாி -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: றிசாட் பதவியேற்றதை வெடி கொழுத்தி கொண்டாட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top