• Latest News

    August 25, 2019

    2015 தேர்தல் முடிவும் 2020 இல் வெற்றி வாய்ப்பும்

    muzath nagoorthamby -
    2015ல் நடை பெற்ற ஜனாதிபதித்தேர்தலில் மைதிரி, ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பெற்ற வாக்குகள்-
    62 17 162- (51.28%)
    மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள்சுதந்திரக்கூட்டமைப்பு
    பெற்ற வாக்குகள் –
    57 68 090- (47.58%)
    வாக்களிப்பு வீதம் 81.52%
    இத்தேர்தலில் நல்லாட்சிக்கான கூட்டணி
    4 49 072 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    2018 உள்ளூராட்சி சபை தேர்தல்,
    ———–
    மஹிந்த அணி பெற்ற வாக்குகள்-
    49 68 762- (44.65%)
    நல்லாட்சிக்கான கூட்டணிக்கட்சிகள் தனித்துப்பெற்ற வாக்குகள்-
    ரணில் தரப்பு (UNP,SLMC,ACMC,மனோகணேசன்தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி)
    பெற்ற வாக்குகள்-
    36 25 510- (32.63%)
    மைதிரி தலைமையிலான
    SLFP, UPFA பெற்ற வாக்குகள்-
    14 87 962- (13.38%)
    JVP பெற்ற வாக்குகள் –
    6 93 875 -(6.27%)
    TNA பெற்ற வாக்குகள்-
    3 39 675 – (03.07%)
    வாக்களிப்பு வீதம் 70%
    நல்லாட்சியை கொண்டு வந்தவர்களான
    (UNP, SLFP ,UPFA, JVP, TNA ,SLMC, ACMC, தமிழர் முற்போக்கு கூட்டணி) போன்ற கட்சிகள்
    பெற்ற மொத்த வாக்கு –
    61 47 020 -(55.35%)
    இந்த நல்லாட்சிக்கான கூட்டணி பிளவுபடாமல் 2020ல் ஜனாதிபதி தேர்தலை
    எதிர் கொண்டிருக்குமாக இருந்தால் SLPP யின் வேட்பாளருக்கு ஒரு இறுக்கமான போட்டியை கொடுத்திருக்க முடியும்.
    ஆனால் இன்நல்லாட்சியிலிருந்து, மைதிரி தலைமையிலான SLFP , UPFA போன்ற கட்சிகள் வெளியேறியுள்ளதுடன் நல்லாட்சிக்கு ஆதரவு வளங்கிய JVP தனித்தும் கேட்கின்றது. இதனால் நல்லாட்சிய்யைக் கொண்டு வந்தவர்கள் பெற்ற மொத்த வாக்கில்(55.35% -20%=
    35.35) வீதமான வாக்குகளே
    எஞ்சியுள்ளன. அத்துடன்சென்ற ஜனாதிபதித்தேர்தலில்
    சிறுபான்மையினர் 95 வீதமானவர்கள் மஹிந்வுக்கு எதிராக வாக்களித்து மைதிரி, ரணில் அரசாங்கத்தை உருவாக்கினர் அவ்வாறு உருவாக்கப்பட்ட அரசாங்கம்
    மஹிந்தவின் ஆட்சியைவிட மிக மோசமான இனவாத்த்தை முஸ்லிங்கள்மீது திணித்து உயிர்களையும், சொத்துக்களையும், காவு கொள்வதற்கு உடந்தையாக இருந்தது மட்டுமல்லாமல் இன்று முஸ்லிம்களை IS IS என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து அச்சுறுத்தி,
    *முஸ்லிம் திருமணச்சட்டம்,
    *முஸ்லிம்களின் கலாச்சார ஆடை ,
    *மார்க்கக்கல்வி போன்றவைகளில் கட்டுப்பாட்டையும் ,மாற்றத்தையும் ஏற்படுத்த முனையும் ஓர் அரசாங்கத்திற்கு இம்முறையும் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஆதரவு வழங்குவார்களா?
    மேலும் கோட்டாபய ராஜபக்ச போன்ற கடும்போக்கு நபர்களுக்கு சிறுபான்மை வாக்குகள் அளிக்கப்படுமா என்பதும்
    மேலும் UNP கூட்டமைப்பு பழக்கப்பட்ட நபரை வேட்பாளராக நிறுத்தினால்
    பாரிய வாக்குச்சரிவிலிருந்து மீண்டு 50. வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதென்பது சாத்தியமாா என்பதையும் சர்வதேச புவியியல்்்் அரசியல் நலன்களை கொண்டு  பார்க்க வேண்டி உள்ளது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2015 தேர்தல் முடிவும் 2020 இல் வெற்றி வாய்ப்பும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top