• Latest News

    August 25, 2019

    ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ களமிறங்குவது உறுதி

    மாளிகை வாழ்க்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
    இன்று மாலை மாத்தறை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
    யாரும் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் எனவும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ களமிறங்குவது உறுதி எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
    வார்த்தையின் அர்த்தத்தில் கூட இலங்கைக்கு முன்னுரிமை வழங்கக் கூடிய இலங்கை பாஸ்ட் எனும் வேலை திட்டத்தை தாங்கள் ஆரம்பித்ததாகவும் இதன் போது அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
    எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அனைவரும் முதன்முறையாக வரலாற்றில் சிறந்த திடமான பயணம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக எனது தாய் நாட்டை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    தன்னை மாளிகைகளில் காண முடியாது எனவும் தன்னை காண வேண்டுமெனில் நாட்டில் உள்ள சிறிய கிராமங்களில் காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    அத்துடன் தனது தந்தை போல் பொது மக்களுடன் கைகோர்த்து தனது மரணத்தை தழுவுவதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ களமிறங்குவது உறுதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top