மட்டக்களப்பு – கல்வியங்காடு இந்து மயானத்தில் தீவிரவாதி ஒருவரது
உடற்பாங்கள் புதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பகுதி மக்கள் இன்று
நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
எனினும் நாளைய
தினமும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட மக்கள் உத்தேசித்திருப்பதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த
பகுதியில் அமைதியின்மை நிலவியது.
கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான இளைஞர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.
உயிர்த்த
ஞாயிறு தினத்தில் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை
தமது பிரதேசத்தில் புதைக்க வேண்டாம் என தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில்
கூறிய போதிலும், அதனை பொருட்படுத்தாது பொலிஸார் அந்த உடற்பாகங்களை நேற்று
இந்து மயானத்தில் புதைத்துள்ளதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்தி
கொழும்பு
– மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்துள்ள போராட்டங்கள் முன்னெடுத்தனர்.
குறித்த பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட அதேவேளை பெரும்
பதற்றநிலை தோன்றியது. இதனால் அங்கு அதிகளவான படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும்
போராட்டம் தற்போது கைவிடப்பட்டதாக எமது செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.

0 comments:
Post a Comment