• Latest News

    August 27, 2019

    ராஜபக்ச யுகத்தில் மணலுக்குள் மறைந்து போன பல எலும்புகளின் எச்சங்கள் இருக்கின்றன - தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா

    ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மறைக்கப்பட்ட சகல சம்பவங்கள் தொடர்பாகவும் விரிவான விசாரணைகள் நடத்தப்படுவது அவசியம் என தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

    கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். 

    சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமாயின் ரத்துபஸ்வல கத்தோலிக்க தேவாலயத்திற்குள் சென்று கத்தோலிக்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் கோத்தபாயவிற்கு கூற விரும்புகிறோம்.

    மண் எண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி வீதியில் இறங்கி போராட்டம் நடத்திய அன்டனி போன்ற கத்தோலிக்கர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும்.

    ஈடிஎப், ஈபிஎப் தொடர்பான போராட்டத்தின் போது, சுட்டுக்கொல்லப்பட்ட ரொஷான் சானக்க என்ற கத்தோலிக்க இளைஞன் சம்பந்தமாகவும் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

    கோத்தபாய ராஜபக்ச அவர்களே, ராஜபக்ச யுகத்தில் மணலுக்குள் மறைந்து போன பல எலும்புகளின் எச்சங்கள் இருக்கின்றன. மறைக்கப்பட்ட பல சம்பவங்கள் இருக்கின்றன. இவை சம்பந்தமாகவும் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
    அருகில் இருப்பதை பார்க்காமல் தொலைவில் இருப்பதை பார் என்று மகிந்த ராஜபக்சவும் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கும் தெரியும் அருகில் இருப்பதை பார்க்காமல் தொலைவில் இருப்பதை பார்த்து இவனை(கோத்தபாய) ஆட்சிக்கு வர விடவேண்டும் என்பதை மகிந்த ராஜபக்ச மறைமுகமாக வேறுவிதமாக கூறியுள்ளார்.
    எமக்கு கிடைக்கும் தகவல்களின் படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு மட்டுமல்ல, மகிந்த ராஜபக்சவும் தனது கையில் இருக்கும் தேனீர் கோப்பை தூக்கியடிக்கும் நிலைமைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    இப்படியான நிலைமையையே கோத்தபாய ராஜபக்ச நாட்டுக்கு ஏற்படுத்த போகிறார் எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ராஜபக்ச யுகத்தில் மணலுக்குள் மறைந்து போன பல எலும்புகளின் எச்சங்கள் இருக்கின்றன - தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top