• Latest News

    August 22, 2019

    மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகள் தருமாறு கோாிக்கை

    சஹாப்தீன் -
    முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தாம் இராஜினாமாச் செய்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் வழங்குமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர். முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் இன்று அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே இக்கோாிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
    இக்கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், அலிசாஹிர் மௌலானா ஆகியோர்கள் ஏற்கனவே வகித்த சுகாதார இராஜாங்க அமைச்சர் பதவியையும்,  அதே போன்று ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் பதவியையும் அவர்களுக்கு மீண்டும் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    இதற்கு அமைய குறித்த அமைச்சுப் பதவிகளை மேற்குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும் எழுத்து மூல கோரிக்கையொன்றையும் முஸ்லிம் காங்கிரஸ் முன் வைத்துள்ளது.
    இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம்.ஹரீஸ்  வகித்த உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார். அவர் தாம் இராஜினாமாச் செய்த இராஜாங்க அமைச்சர் பதவியை மீண்டும் வகிப்பதற்கு கல்முனை பிரதேச செயலக விவகாரப் பிரச்சினையை முஸ்லிம்களுக்கு பாதகமற்ற வகையில் தீர்க்கும் வரை ஏற்கப் போவதில்லை என்று தொிவித்திருந்தார். அதனால், பைசால் காசிம், அலிசாஹிர் மௌலான ஆகியோர்கள் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டாலும் இவர் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று தொிவிக்கப்படுகின்றன.
    ஆயினும், ஹாிஸ் இராஜாங்க அமைச்சர் பதவியை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் முஸ்லிம் காங்கிரஸினால் வழங்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றன.
    ஹாிஸ் இராஜாங்க அமைச்சர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளாது போனால், அந்தப் பதவி திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை சென்றடைவதற்குாிய வாய்ப்புக்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    இதே வேளை, பைசால் காசிம், அலிசாஹிர் மௌலான, ஹரிஸ் ஆகியோர்கள் கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியை மீளவும் பெற்றுக் கொண்ட போது தொிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கு முடிவு செய்துள்ளார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகள் தருமாறு கோாிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top