ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கோத்தபாய ராஜபக்ச அணியுடன் இணைக்க தேவையான
நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்து வருவதாக ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க
தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் தொிவிக்கையில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு
ஆதரவளிக்க வேண்டியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடமை எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த
சிலர், கட்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொண்டு செல்லவும் அமைச்சர் சஜித்
பிரேமதாசவின் தோளில் தொங்கவும் முயற்சித்து வருகின்றனர் எனவும்
எஸ்.பி.திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment