• Latest News

    August 27, 2019

    ரணிலின் இறுதி முயற்சியும் தோல்வி!

    ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தனக்கு ஆதரவானவர்களை நியமிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட இரகசிய முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
     ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் மொத்தம் 70 உறுப்பினர்கள் உள்ள நிலையில் தற்போது 40 பேரே அதில் அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில், மிகுதி உள்ள 30 உறுப்பினர்களையும் தனக்கு ஆதரவானவர்களாக நியமிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தார்.

    எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட முயற்சிகள் இறுதி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது திட்டங்கள் பலனளிக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரணிலின் இறுதி முயற்சியும் தோல்வி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top